திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கோபி போட்ட பிளானில் மறுபடியும் சிக்கித் தவிக்க போகும் பாக்கியா.. எழில் கொடுக்க போகும் ட்விஸ்ட்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தொடர்ந்து அவமானங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருவதால் பாக்யாவின் மனநிலையை மாற்ற வேண்டும். அதே மாதிரி ஈஸ்வரியின் மன நிலைமையும் மாற்ற வேண்டும் என்பதற்காக ஜெனி எடுத்த அதிரடி முடிவு தான் எல்லோரும் ஒருநாள் வெளியே போயிட்டு வரலாம் என்று. அதன்படி அமிர்தாவையும் கூட்டிட்டு மாமியாருடன் என்ஜாய் பண்ணுவதற்கு ஜெனி கிளம்பி விட்டார்.

போன இடத்தில் பாக்யா மற்றும் ஈஸ்வரியை சந்தோஷமாக வைத்து கொள்ளும் அளவிற்கு என்னெல்லாம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதையெல்லாம் செய்து மொத்த கவலையும் மறக்கடிக்கும் விதமாக மருமகள்கள், மாமியாரின் மனதை மாற்றப் போகிறார்கள். ஆனாலும் எல்லா சந்தோஷத்தையும் தாண்டி வீட்டிற்கு திரும்பி வந்த பாக்கியாவிற்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நிறைய இருக்கப் போகிறது.

அதாவது கோபி, பக்காவாக காய் நகர்த்தி பாக்யாவை கவுப்பதற்கு பிளான் பண்ணி வருகிறார். அந்த வகையில் முதற்கட்டமாக பாக்கியா நடத்தும் ஹோட்டலுக்கு அவமரியாதையை ஏற்படுத்திக் கொடுத்து கூட்டம் வராதபடி ஒரு கெட்ட பெயரை வாங்கி கொடுத்து விட்டார். இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் பாக்கியாவிற்கு மறுபடியும் ஹோட்டலில் ஆனந்த் மூலமாக ஒரு செக் வைக்கப் போகிறார்.

அடுத்ததாக இனியாவுக்காக டான்ஸ் மாஸ்டரை ஏற்பாடு பண்ணி இனியா மனதிலும் கோபி ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார். இதற்கிடையில் செழியன் ஏற்கனவே அப்பா பிள்ளை என்பதற்கு ஏற்ப எப்போதுமே கோபி பக்கம் தான் சாய்ந்து இருப்பார். அடுத்ததாக மிச்சம் இருப்பது எழில்தான். அந்த வகையில் எழிலையும் கவுப்பதற்கு அடுத்த பிளானையும் போட்டு விட்டார்.

அதாவது எழிலுக்கு தேவையான தயாரிப்பாளர் மூலம் ஒரு படத்தை எடுப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டார். இது சம்பந்தமாக பூஜை நடத்தும் பொழுது பாக்யா வரக்கூடாது ஈஸ்வரி கண்டிப்பாக வரவேண்டும் என்று தயாரிப்பாளர் மூலம் எழிலுக்கு ஒரு செக் வைக்கிறார். அத்துடன் இனி எழிலும் என் பக்கம் சாய்ந்து விட்டால் தனி மரமாக பாக்யா நடுரோட்டில் தான் நிற்க வேண்டும் என்று மனதிற்குள்ளே ஆனந்தப்பட்டு கொள்கிறார்.

ஆனால் இந்த விஷயத்தை தயாரிப்பாளர், எழிலிடம் சொல்லும் பொழுது அதிர்ச்சியாகும் எழில் வாய்ப்பா அம்மாவா என்று யோசிக்கும் போது முதலில் வாய்ப்பு தக்க வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து தயாரிப்பாளர் சொன்னபடி பாக்கியாவை நிராகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி மட்டும் நடந்து விட்டால் கோபி தொடர்ந்து ஜெயித்துக் கொண்டு பாக்யாவை ஒன்னும் இல்லாமல் ஆக்குவதற்கு இதுவே ஒரு அடித்தளமாக அமைந்துவிடும். ஆனால் எழில் அப்படி பண்ணாமல் கண்டிப்பா ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News