இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக் பாஸ் சீசன்-8 தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவியின் டிஆர்பி இந்த வாரம் எகுறி விட்டதாம்.
Cash box டாஸ்கில் 30 நொடியில் பணத்தை எடுத்து திரும்ப வரவில்லை என்றால் பிக் பாஸ் வெல்லும் கனவு முடிந்துவிடும். அப்படி ஜாக்குலின் 30 நொடி தொட முடியாததால் பிக் பாஸ் கதவு மூடப்பட்டது.
இதே டாஸ்கில் அதிகபட்சமாக VJ விஷால் 5 லட்சம் வரை தற்போது வரை கைப்பற்றியுள்ளார். இதைத்தவிர முத்து 50,000/-, Rayan 2 லட்சம், பவித்ரா தலா 2 லட்சம் ஜெயித்துள்ளனர்.
சௌந்தர்யா பணம் வேண்டாம் என்று பாதியிலேயே திரும்பியதால் தல தப்பியது. ஆனால் ஜாக்குலின் போராடி பார்த்து டாஸ்க் முடிக்க முடியாத சூழ்நிலையில் வெளியேற்றப்பட்டார்.
ஏற்கனவே Rayan டிக்கெட் 2 பினாலே டாஸ்க் வென்று இறுதி கட்டத்திற்கு சென்று விட்டார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 8 விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் தீபக் வெளியேற்றப்பட்டு திறமையான கேப்டன்ஷிப் என்ற பட்டத்தை பிக் பாஸ் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.