வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

“கார்ல வந்தது ஒரு குத்தமாப்பா?” 5 நடிகர்களை சீண்டிய வடிவேலு

Tamil celebrities faced Problems by Actor Vadivel: திரையில் சிறந்த காமெடி நடிகர் என கொண்டாடப்பட்ட வடிவேலு அவர்கள் நிஜ வாழ்க்கையில் சில வில்லத்தனங்களை செய்ததினால் சக நடிகர்களாலும் ரசிகர்களாலும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். அவர் சீண்டிய நடிகர்களையும் அதனால் வந்த விளைவுகளையும் இங்கு காணலாம்.

அஜித்: ரஜினியின் பில்லா ரீமேக்கில் அஜித் நடித்தார் என்பது நாடறிந்த உண்மை. விஜய்யின் வில்லு படத்திற்காக மை நேம் இஸ் பில்லா என்ற பாடலை கிண்டல் அடிப்பது போல் ரெடி பண்ணி வடிவேலுவை வைத்து படமாக்க முயற்சித்தனர். இதனால் காண்டான அஜித்தின் ரசிகர்கள் வடிவேலுவை துவைத்து எடுத்தனர் இதன் பின்பே இம்முயற்சி கைவிடப்பட்டது.

விஜயகாந்த்: விஜயகாந்தின் உறவினர் மற்றும் வடிவேலுவின் வீடு அருகருகே இருக்க, ஒரு முறை கார் பார்க்கிங் சம்பந்தமான பிரச்சனையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாக பிரச்சனை பெரிதாகி விஜயகாந்தின் ரசிகர்கள் வடிவேலுவை அடித்துவிட்டனராம். அதற்குப் பின் வடிவேலு விஸ்வரூபம் எடுத்து அரசியல் பிரச்சாரத்தில் இறங்கி விஜயகாந்தை திட்டியதால் வந்த விளைவை அனைவரும் அறிவர்.

Also read: ரத்தமும் சதையமா இருந்துட்டு இந்த அஞ்சு பேரு சாவுக்கு கூட போகாத வடிவேலு.. விஜயகாந்த் ஆல் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி

ஜெயமணி: காமெடி நடிகர் ஜெயமணி மற்றும் வடிவேலு இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.  ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் உறவு வைத்து பேசி நெருங்கிய நட்புடன் இருந்து வந்த நிலையில் ஒருமுறை காரில் வந்து இறங்கிய ஜெயமணியை பார்த்து வடிவேலுவின் ஆதரவாளர்கள் கை காட்ட பொறாமையில் பொங்கினார் வடிவேலு. “கார்ல வந்தது ஒரு குத்தமாப்பா?”  என்று ஜெயமணி கேட்க, வந்த சண்டையில் இருவரும் பிரிந்தனர்.

சிசர் மனோகர்: தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வடிவேலு தட்டி பறித்தார் என்ற நோக்கிலும். படத்தில் தான் நடித்த சீன்களை கட் செய்தார் என்ற குமுறலிலும் இருந்தார் சிசர் மனோகர். வடிவேலுவின் மீது கொலை வெறியில் இருந்த சிசர் மனோகரை இயக்குனர் ஒருவர் சமரசம் செய்து கூல் பண்ணினார். “அவர் மட்டும் இல்லை என்றால் வடிவேலுவை முடிச்சிருப்பேன்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சிசர் மனோகர். அந்த அளவுக்கு வடிவேலுவின் மீது கொலைவெறி.

சிங்கமுத்து: வடிவேலுவின் மேனேஜர் மூலமாக வடிவேலுக்கு சென்னையில் ப்ராப்பர்ட்டி வாங்கிய விஷயத்தில் ஆரம்பித்து சில வயித்தெரிச்சல்கள், குமுறல்கள் என இவர்களின் சண்டை நீண்டு கொண்டே செல்கிறது. “கடைசி காலத்துல கண்ணீர் வடிப்பான்” என்று  சிங்கமுத்து சாபம் விடும் அளவுக்கு பல வம்புகளை செய்திருந்தார் வடிவேலு.

Also read: அவன் எல்லாம் ஒரு ஆளா.. 2024 தொடக்கத்தில், வடிவேலுக்கு நடந்த அவமானம்

Trending News