வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அசைவமே அலர்ஜின்னு தெறித்து ஓடும் 5 நடிகர்கள்.. குமட்டிக்கிட்டு வாந்தி எடுக்கும் தனுஷ்

Tamil celebrities who are pure vegetarian: பணம் சம்பாதிப்பதற்காகவே யூடியூப் பிரபலங்கள் பலரும் விதவிதமான அசைவ உணவுகளை தயார் செய்வதிலும் அவை கிடைக்கும் இடத்தை தேடி தேடி உண்பதுமாக திரிகின்றனர். ஆனால் கோடி கோடி சம்பாதித்த திரை பிரபலங்களோ அசைவத்திற்கு டாட்டா சொல்லி சைவத்திற்கு மாறி விட்டனர்.

தனுஷ்: பல உருவ தோற்ற கிண்டல்களை எதிர்கொண்ட தனுஷ். அசைவ உணவே தவிர்த்து எண்ணெயில் பொரித்த உணவுகளை ஒதுக்கிவிட்டாராம். வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடும் தனுசுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் என்பன  விருப்ப  உணவுகள் ஆகும். சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்த்து டயட்டில் சப்பாத்திக்கு இடம் கொடுக்கும் தனுஷ் அடிக்கடி சூப் குடிக்கும் பழக்கம் கொண்டவராம்.

அனிருத்: உடல் தேகத்தில் ஒரு படி கூட கூடி விடக் கூடாது என்று கவனமாக இருக்கும் அனிருத் கடுமையான உணவு பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். சென்னை சிட்டி பாடலில் எங்க ஊரு இட்லி போல வருமா, ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா என்று சொல்லிவிட்டு காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிப்பது ஓட்ஸ், கிரீன் சாலட் என்ற  உணவு கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்.

Also read: விவாகரத்துக்கு பின் நிஜ வாழ்க்கையில் 2 குழந்தைக்கு தாயாகும் சமந்தா.! வெறுத்துபோய் எடுத்த முடிவு

மாதவன்: பெண்களால் மேடி என அழைக்கப்படும் சாக்லேட் பாய் மாதவன், உடல் அமைப்பைப் பார்த்து அசைவ சாப்பிடுபவர் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது ஏனெனில் பாரம்பரிய சமூகத்தை சேர்ந்த ரொம்ப ஆச்சாரமான இவர் அசைவ உணவை தொடுவதே இல்லை. முற்றிலும் சைவம்.

சமந்தா: சிறிய வயதில் இருந்தே உடற்பயிற்சி, யோகா என உடலை பேணும் சமந்தா மயோடிஸ் நோய்க்கு பின் தீவிர சைவமாகவும், கடுமையான உடல் பலர் பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர் ஆகவும் மாறியுள்ளார் சமந்தா. மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று பாரம்பரிய மருத்துவ முறையையும்  மேற்கொண்டு வருகிறார்.

தமன்னா: கடுமையான ஒர்க் அவுட் மூலம் தனது உடல் அமைப்பை பேணி வரும் தமன்னா சமீப காலமாக அசைவை உணவை விடுத்து சைவத்திற்கு மாறி உள்ளாராம். இந்த கொள்கையை எத்தனை நாளைக்கு கடைப்பிடிக்க போகிறாரோ என்று தெரியவில்லை  இப்போதைக்கு சைவம் தான்.

மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது. சாப்பிடலனா மீனுக்கு நல்லது என்று ,சமூக சேவை மனப்பான்மையோடு  உடல் ஆரோக்கியம் டயட் என பலரும் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறினாலும் அசைவ உணவை விரும்பி உண்ணுபவர்களும் கூடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

Also read: காவாலையா குத்தாட்டத்துக்கு வாங்கியதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கும் தமன்னா</a

Trending News