செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் கொடி கட்டி பறக்கும் 7 ஜோடிகள்.. உங்கள் பேவரிட் யாரு.?

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள் சிறப்பான முறையில் திருமணம் செய்து முடித்தனர். ஒருவழியாக நயன்தாராவிற்கு திருமணம் முடிந்தது என்று ஒரு கூட்டமும் ஐயையோ நமது தலைவிக்கு திருமணம் முடிந்துவிட்டதே என்று அலரும் இன்னொரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களையும் சேர்த்து தமிழ் சினிமாவில் பல காதல் ஜோடிகள் திருமணம் புரிந்து சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி சில ஜோடிகளை இந்த வரிசையில் காணலாம்.

ரோஜா – ஆர் கே செல்வமணி: தொண்ணூறுகளில் மிகவும் பிஸியாக இருந்த இளம் இயக்குனர் ஆர் கே செல்வமணி. இவர் இயக்கிய செம்பருத்தி புலன்விசாரணை கேப்டன் பிரபாகரன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. செம்பருத்தி திரைப்படத்தில் ரோஜாவை இவர் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அது முதலே இருவருக்குள்ளும் இருந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. காதல் கைகூடிய பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை சிறப்பாக வாழ்ந்து வருகின்றார்கள். ரோஜா, நகரி தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராதிகா – சரத்குமார்: ராதிகாவும் சரத்குமாரும் முதல் திருமணத்தின் தோல்வியால் பாதிக்கப்பட்டு துவண்டிருந்த நேரம் சூரிய வம்சம் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் பிறந்தது. மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது வரை சிறப்பான தம்பதிகளாய் வாழ்ந்து வருகிறார்கள் என்பது நல்லதொரு செய்தி. இவர்கள் இருவருக்கும் பிறந்த மகன் தற்போது வாலிபராக வலம் வருகிறார். சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகளும் ராதிகாவுக்கு ரேயான் என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி – அஜித் குமார்: சரன் இயக்கத்தில் அஜித்குமார் ஷாலினி இணைந்து நடித்த திரைப்படம் அமர்க்களம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அஜித்திற்கு ஷாலினி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மாறி ஷாலினியிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினிக்கும் அஜித்தை பிடித்துப் போக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது வரை இருவரும் சிறப்பான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பது தமிழகம் முழுவதும் அறிந்த விஷயம்.

ஜோதிகா – சூர்யா: சூர்யாவும் ஜோதிகாவும் முதன்முறையாக பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருந்தே அவர்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. பேரழகன் படத்தின் போது இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறியதாக சில பத்திரிகை செய்திகள் கூறின. சூர்யாவின் வீட்டில் சில எதிர்ப்புகள் வந்த போதும் அதை சமாளித்து ஜோதிகாவை கரம் பிடித்தார். திருமணத்திற்குப் பின்னரும் ஜோதிகா ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது வரை சிறப்பாக வாழ்ந்து வரும் சினிமா தம்பதிகளில் முக்கியமானவர்கள் சூர்யாவும் ஜோதிகாவும்

சினேகா – பிரசன்னா: சினேகாவும் பிரசன்னாவும் அமெரிக்க வாழ் தமிழர் மற்றும் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் தம்பதிகளாக நடித்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அவர்களது காதலுக்கு முக்கிய காரணம் இளையராஜாவின் இசையும் என்று அப்போது அவர்கள் தெரிவித்திருந்தனர். திருமணத்தில் முடிந்த இவர்களது காதல் திருமணம் இன்று வரை சிறப்பாக தொடர்கிறது.

சாயிஷா – ஆர்யா: நடிகர் ஆர்யா காஜினிகந்த் படத்தில் நடித்தபோது சாயிஷாவிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தார். அதன் பிறகு காப்பான் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். நீண்ட நாட்களாக திருமணத்திற்குப் பின் தேடி வந்த ஆர்யாவிற்கு சாயிஷாவை மிகவும் பிடித்துப்போக அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். 18 வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தபோதும் சயிசாவிற்கு ஆர்யாவை பிடித்துப் போக அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு இருவரும் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கி கல்ராணி – ஆதி: அரவான், மரகதநாணயம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ஆதி. இவருக்கும் நிக்கிகல்ரானி க்கும் இடையே சில வருடங்களாக காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனபோதும் இருவரும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் தங்களது சமூக வலைதளங்கள் மூலமாக காதலை உறுதிப்படுத்தினர். மிக சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இசைஞானி இளையராஜா இவர்கள் திருமணத்திற்கு சென்று சிறப்பாக நடத்திக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தம்பதிகள் போல மேலும் சில தமிழ் சினிமா பிரபலங்கள் தம்பதிகளாக சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப் போலவே சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் சிறப்பாக வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம்!

Trending News