திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எந்த கேரக்டரானாலும் அசால்ட் பண்ணுவோம்.. சத்தியராஜ் போல் ஆல்-ரவுண்டராக அசத்தும் 5 நடிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது நகைச்சுவை நடிகர்கள், துணை நடிகர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு படத்தில் கதாநாயகிகளுக்கு கதை இருக்கோ இல்லையோ அந்த படத்தில் நடிக்கும் துணை நடிகர்களுக்கு கட்டாயம் ஸ்ட்ராங்கான கதை இருக்கும். அப்படி ஒரு படத்தின் கதையை கொண்டு போக துணை நடிகர்களின் கதாபாத்திரம் மிகவும் முக்கியம். அப்படி நம் எல்லோருக்கும் பிடித்தமான 5 துணை நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஜெயபிரகாஷ்: பசங்க, நான் மகான் இல்லை, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக பிரபலமடைந்த நடிகர் ஜெயபிரகாஷ், ஜி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் டாக்டர், போலீஸ், அப்பா, சித்தப்பா, ஆசிரியர் என பல கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இன்றுவரை சிறந்த துணை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் சைலன்ட் வில்லனாகவும் நடித்து மிரட்டியிருப்பார்.

நாசர்: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத துணை நடிகராக வலம் வருபவர் நாசர். ஆரம்ப காலகட்டத்தில் வில்லன், கதாநாயகன் உள்ளிட்ட பல கதாபாத்திரத்தில் மாறிமாறி நடித்த இவர் தற்போது துணை நடிகர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நாசரின் நடிப்பு உலக அளவில் பெரிதும் பேசப்பட்டது. தற்போது நடிகர் சங்க தலைவராக உள்ள நாசர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார். இவரின் தனித்துவமான குரல் மற்றும் நடிப்பிற்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.

குரு சோமசுந்தரம்: 2011 ஆம் ஆண்டு வெளியான ஆரணிய காண்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான குரு சோமசுந்தரம் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தூங்காநகரம், பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் பப்ளிக் புரோசெக்யூட்டாக சூர்யாவிற்கு எதிர் வழக்கறிஞராக நடித்து அசத்தியிருப்பார்.

சத்யராஜ்: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான சத்யராஜ் தன்னுடைய உயரமான ஆறடி அழகால் கதாநாயகனாக களமிறங்கினார். பின்னர் திரைப்படங்களில் தன்னுடைய எதார்த்தமான கோயம்புத்தூர் லொள்ளு வசனத்தை வைத்து ஆண்ட்டி ஹீரோ ரோலில் ஒரு கலக்கு கலக்கினார். தற்போது சத்யராஜ் முன்னணி நடிகர்களின் தந்தையாகவும், போலீஸ் கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி, மெர்சல், கடைக்குட்டி சிங்கம், நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறந்த துணை நடிகராக நடித்து இருப்பார்.

வினோதினி வைத்தியநாதன்: 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜின் காஞ்சிவரம் திரைப்படத்தின் மூலமாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய வினோதினி வைத்தியநாதன், பின்னர் 2011ம் ஆண்டு வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகு குட்டி செல்லம், ஓகே கண்மணி, சூரரை போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை காண்பித்து இருப்பார்.

Trending News