வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உருகி உருகி காதலித்த 8 சினிமா பிரபலங்கள்.. 4 பேரை வலைத்து போட்ட சிம்பு

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தொடர்ந்து நமது வலைத்தளத்தில் பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமா உலகில் காதலர்களாக வளம் வந்து, பின்னர் ஏதோவொரு ஒரு காரணத்தால் பிரிந்த காதல் பறவைகளை பற்றி பார்க்கலாம்.

பிரபு – குஷ்பூ: தமிழ் சினிமாவின் சிறப்பான ஜோடியாக இவர்கள் இருந்திருக்க கூடும். சின்னத்தம்பி படம் தந்த வெற்றி இவர்களை பல படங்களில் சேர்ந்து நடிக்க வைத்தது. உடன் காதலும் பிறந்தது. சிவாஜி வீட்டு கண்ணுகுட்டியான பிரபுவுக்கு ஏராளமான தடைகள். அதை மீறி நிச்சயம் முஸ்லிமான குஷ்பூவை கரம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், இருவரும் பிரிந்தனர். இவர்கள் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர் என்று கூட ஒரு செய்து அப்போது வந்தது.

விஜயகாந்த் – ராதிகா: இருவருமே தெலுங்கை பூர்விகமாக கொண்ட காரணத்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்த காரணத்தாலும் நிச்சயம் இவர்களுக்குள் காதல் இருக்கிறது, திருமணம் வரை சென்றாலும் ஆச்சரியம் இல்லை என்று அப்போது பத்திரிகைகள் கிசுகிசு எழுதின. எதற்கும் அஞ்சாத விஜயகாந்த், அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் ராதிகாவுடன் தொடர்ந்து தனது நட்பை/காதலை தொடர்ந்து வந்தார். ராதிகாவோ யாரும் எதிர்பார்க்கா வண்ணம், பிரதாப் போத்தனை காதலித்து திருமணம் புரிந்து ஒரே வருடத்தில் விவாகரத்தும் வாங்கி விட்டார்.

விஜய் – சங்கவி: ஆரம்ப கால விஜய், சங்கவி, சுவாதி என்று இருவருடனும் மாறி மாறி நடித்தார். அதில் யாருடன் காதல் என்பதில் கூட குழப்பம் வந்தது. இறுதியில் அவர் சங்கவியை தான் காதலிக்கிறார், நிச்சயம் அவரை கரம் பிடிப்பார் என்று சொல்லப்பட்டது. அதற்கு எல்லாம் கிரீடம் வைத்தது போல சங்கவியுடன் அதிக நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார் விஜய். ஜோடிகளும் அதிகம் வெளியில் சுற்றியது அப்போது பிரபலமான செய்தியாக இருந்தது. இருந்தாலும் சங்கவியை தளபதி கழட்டிவிட்டார். அவரும் 40+ வயதில் தான் திருமணம் செய்துகொண்டார்.

அஜித் – ஹீரா: அல்டிமேட் ஸ்டாராக அஜித் இருந்தபோது கவர்ச்சி நாயகி ஹீராவுடன் சேர்ந்து ஊர் சுற்றினார். இருவரும் காதலிப்பது பற்றி தான் அப்போது கோலிவுட்டில் பேச்சு. அதே போல இருவரும் சிறந்த ஜோடிகளாக இருப்பார்கள் என்று சொல்ல பட்டது. ஆனால் அஜித் ஹீரோவை கழட்டிவிட்டு கொஞ்ச நாள் தனியாய் இருந்தார். ஹீரா, காதல் தோல்விக்கு காரணம் சொல்லாமல், திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் அஜித், ஷாலினியை மனம் புரிந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

கார்த்தி – தமன்னா: பையா படத்தில் இணைந்து நடித்த போது கார்த்திக்கும் தாமன்னாவுக்கும் இடையில் காதல் பிறந்தது. இருவரும் ஒன்றாக நாடுகள் கடந்து காதல் புரிந்தனர். ஏற்கனவே சூர்யா, ஜோதிகாவை காதலித்து மனம் புரிந்த வருத்தத்தில் இருந்த சிவகுமார், இந்த திருமணத்திற்கு ரெட் கார்டு போட்டார். எவ்வளவு முயன்றும் முடியாத காரணத்தால், தந்தையின் விருப்பத்துக்கு இணங்க, கார்த்தி தமன்னாவை கழட்டிவிட்டு விட்டு, வீட்டில் பார்த்த மணப்பெண்ணை திருமணம் புரிந்து வாழ்கிறார்.

சிம்பு – நயன், ஹன்சிகா, நிதி, ஸ்ரீநிதி: சிம்புவுக்கு, வம்பு என்று பெயர் வைத்திருக்கலாம். அந்த அளவுக்கு பெண்களிடம் வம்பு செய்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாராவை காதலில் விழவைத்தவர், அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் வெளிவரும் அளவுக்கு நெருக்கமாக இருந்து பின்னர் கழட்டி விட்டுவிட்டார். கொஞ்ச நாளிலேயே மற்றொரு முன்னணி நாயகியாக இருந்த ஹன்சிகாவையும் தனது காதல் வலையில் வீழ்த்தினார். இந்த காதலும் பிரிந்துவிட, தற்போது புதுவரான நித்தி அகர்வாலை காதலித்துக்கொண்டு இருக்கிறார். இடையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி வேறு, சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார் என்று வேறு புயலை கிளப்பினார்.

அனிருத் – ஆண்ட்ரியா: சில ஆண்களுக்கு தன்னை விட மூத்த ஆண்ட்டிகளை பிடிப்பது போல, அனிருத் தன்னை விட 6 வயது அதிகமுடைய பாடகி, நடிகை ஆண்ட்ரியாவை காதலித்தார். அவர்கள் இருவரும் நெருக்கமாக, முத்தமிட்ட புகைப்படங்கள் இணையம் முழுவதும் நிரம்பி வழிந்தன. என்ன காரணமோ, இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது இருவரும் சிங்கள் தான். ஆனால் ஆளாளுக்கு மிங்கில் ஆகிக்கொண்டு தன இருக்கிறார்கள்.

விஷால் – வரலட்சுமி: அதிரடி படங்கள் மூலம் நடிகராக இருக்கும் விஷால், சரத்குமாரின் வாரிசான வரலட்சுமியை துரத்தி துரத்தி காதலித்தார். இருவரும் சேர்ந்து நடித்த முதல் படமான மதகஜராஜா இன்று வரை வெளியில் வரவே இல்லை. அவ்வளவு ராசி. இவர்கள் நிச்சயம் திருமணம் வரை செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் அணி ஒன்று உருவாக, அதனால் வந்த தகராறில், தந்தை பக்கம் நின்றார் வரு. அதன் காரணமாக இவர்களது காதல் சீக்கிரம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News