செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஒன்றாக தங்கியிருந்த 5 நகைச்சுவை நடிகர்கள்.. கல்லாப்பெட்டி சிங்காரத்தை ஜொலிக்க வைத்த பாக்கியராஜ்

எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்த நடிகர்களுக்கிடையே இருந்த நட்பு என்பது இன்று வரை அனைவரையும் ஆச்சரியத்தில் வியந்து பார்க்கும் விதமாகவே இருந்தது. அவர்கள் இப்போது கூட ஏதாவது ஒரு பொது மேடைகளில் சந்தித்துக் கொள்ளும் பொழுது தங்கள் நட்பை பாராட்ட மறப்பதில்லை. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த ஐந்து பேர் ஒரே ரூமில் தங்கி இருந்து சினிமாவில் முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் பலருக்கு வாய்ப்பு வழங்கி வெற்றி பெற வைத்தது இயக்குனர் கே பாக்யராஜ் தான்.

கவுண்டமணி: 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் எப்படி தமிழ் சினிமாவிற்கு கமல் மற்றும் ரஜினிகாந்த் என்ற இரு பெரும் துருவங்கள் கிடைத்ததோ, அதே படத்தில் இருந்து கிடைத்தவர் தான் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி. ஆரம்ப காலங்களில் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் படங்களில் கொஞ்சம் சீரியஸ் கேரக்டர் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் நடித்து வந்த கவுண்டமணி பின்னர் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நகைச்சுவை ஜாம்பவானாக மாறினார்.

Also Read:கல்லாப்பட்டி சிங்காரத்தின் மறக்க முடியாத 5 சூப்பர் ஹிட் படங்கள்.. மனுஷன் 100 படத்திற்கு மேல் நடிச்சு பின்னிட்டாரு!

கல்லாபட்டி சிங்காரம்: இப்போதைய தலைமுறைக்கு கல்லாப்பட்டி சிங்காரம் என்றால் யார் என்று தெரியாமல் வேண்டுமானால் சினிமா ரசிகர்களுக்கு இருக்கலாம். ஆனால் அவருடைய காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. சுவரில்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள் போன்ற படங்களில் இவருடைய காமெடி காட்சிகள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. கல்லாப்பெட்டி சிங்காரம் இல்லாத பாக்யராஜ் படங்களே இல்லை என்று சொல்லலாம்.

கருப்பு சுப்பையா : நகைச்சுவை மன்னன் கவுண்டமணியின் காமெடி காட்சிகளில் நடித்து பெயர் பெற்றவர்களில் மிக முக்கியமானவர் கருப்பு சுப்பையா. இவள் நடித்த ஆப்பிரிக்கா மற்றும் அண்டாவுக்கு ஈயம் பூசும் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் ரசித்துப் பார்க்கப்படுகிறது.

Also Read:பாக்யராஜ் இயக்கத்தில் வெள்ளிவிழா கண்ட 7 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க மிஸ் பண்ணிடாதிங்க

வெண்ணிறாடை மூர்த்தி: வெண்ணிற ஆடை என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மூர்த்தி. இந்த படத்தில் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு இவருடைய பெயர் வெண்ணிறாடை மூர்த்தி என்றே அழைக்கப்பட்டது. இவர் தமிழ் சினிமாவில் நிறைய காமெடி ரோல்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குமரிமுத்து : நடிகர் குமரிமுத்து கன்னியாகுமரி பகுதியில் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர். குமரிமுத்துவின் நடிப்பு மற்றும் நகைச்சுவையைத் தாண்டி அவருடைய வித்தியாசமான சிரிப்புதான் தமிழ் சினிமாவில் அவருக்கான அடையாளத்தை கொடுத்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே குமரிமுத்துவின் சிரிப்பு மறக்க முடியாத விஷயமாக இருக்கிறது.

Also Read:பாக்யராஜ் நிகழ்த்திய அறிய சாதனை.. வசந்த காலமாக அமைந்த அந்த ஆண்டு

Trending News