சினிமாவைப் பொருத்தவரை ஒவ்வொரு காலத்திற்கும் ஏதாவது ஒரு புது டெக்னாலஜி அறிமுகமாகி அதனை படத்தில் பயன்படுத்துவார்கள். அன்றைய காலத்தில் பிளாக் அண்ட் ஒயிட் முறை தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது அனிமேஷன் வைத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த அளவிற்கு சினிமாவில் பல டெக்னாலஜி வளர்ந்துள்ளன. ஆனால் தமிழ் சினிமாவில் புது டெக்னாலஜி பயன்படுத்தி வெளியான படங்களை பற்றி பார்ப்போம்.
7.1 சவுண்ட் சிஸ்டம்: கார்த்திக் சுப்பராஜ் மற்றும் விஜய் சேதுபதி இவர்களது கூட்டணியில் வெளியான திரைப்படம் பீட்சா. முதன் முதலில் 7.1 சவுண்ட் சிஸ்டம் பீட்சா படத்தில் தான் பயன்படுத்தப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஆரோ 3டி சவுண்ட் சிஸ்டம்: ஹாலிவுட் படத்திற்கு நிகரான ஒரு சவுண்ட் காலடியை முதன் முதலில் பயன்படுத்தியது உலக நாயகன் கமல்ஹாசன். விஸ்வரூபம் படத்தில் பறக்கும் சவுண்ட், தண்ணீர் சொட்டும் சவுண்ட் போன்றவை 7.1 சிஸ்டத்திற்கு டபுள் மடங்கு பயன்படுத்தப்பட்டது.

50 ஆயிரம் அடி போஸ்டர்: சினிமாவை பொருத்தவரை எந்த படம் வெளியானாலும் ஒரு சுவரையும் விட்டுவிடாமல் படத்தினுடைய போஸ்டரை ஒட்டி விடுவார்கள் நம்முடைய ரசிகர்கள். ஆனால் பாகுபலி படக்குழு படத்தை பிரமோஷன் செய்வதற்காக 50000 அடி அளவிற்கு போஸ்டரை பயன்படுத்தி கின்னஸ் சாதனை படைத்தனர்.
100 கோடி கலெக்ஷன்:
சினிமாவைப் பொருத்தவரை தற்போது ஒரு படம் பல கோடி வசூலை பெற்று வருகிறது. ஆனால் முதலில் கோடியில் வசூல் சாதனை படைத்தது ரஜினி, ஷங்கர் கூட்டணியில் வெளியான சிவாஜி திரைப்படம் தான். தற்போது எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் முதலில் 100 கோடி வசூல் என்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.

முதல் பெண் ஒளிப்பதிவாளர்: சினிமாவைப் பொருத்தவரை ஒளிப்பதிவாளர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது பிசி ஸ்ரீராம் மற்றும் கே வி ஆனந்த். ஆனால் பாக்யராஜ் நடிப்பில் வெளியான சின்னவீடு படத்தில் முதன் முதலில் பெண் ஒளிப்பதிவாளராக பி ஆர் விஜயலட்சுமி அறிமுகமாகி சாதனை படைத்தார்.

சூப்பர் 35 ஃபார்மேட்: புதுப்பேட்டை படத்தில் தான் முதன் முதலில் சூப்பர்டா 3டி பார்ட்மென்ட் பயன்படுத்தப்பட்டது. அதாவது கலர் டோன் மாற்றாமலேயே படத்தின் காட்சிகளை வடிவமைக்கும் டெக்னாலஜி. இதனை வைத்துதான் படத்தின் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

4d சவுண்டு: முதன்முதலில் 2.o படத்தில்தான் 4D சவுண்ட் பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 2.o படத்தில் பல டெக்னாலஜியை ஷங்கர் பயன்படுத்தி இந்திய சினிமாவிற்கு பெருமை பெற்றுக்கொடுத்தார். இப்படம் வெளியாகி உலக அளவில் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.
