தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் குவிக்கிறார்கள். ஹீரோக்கள் தங்களை மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ள தற்போது பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் பல காட்சிகளைப் படமாக்குவதில் மிகுந்த சிரமம் இருக்கும். தன்னுடைய கடின உழைப்பால் 60 களில் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற பட்டியலை பார்க்கலாம்.
எம்ஜிஆர்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது எம் ஜி ஆரும் உண்டு. பாக்ஸ் ஆபீஸ் கிங் என்ற அழைக்கப்படும் எம்ஜிஆர் அந்த காலகட்டத்தில் ஒரு படத்திற்கு 3 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார்.
சிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவின் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பல ஏரியாக்களில் எம் ஜி ஆரை விட அதிகமாக ரசிகர்களை வைத்துள்ள ஒரே நடிகர் சிவாஜி மட்டும்தான். தன்னுடைய நடிப்புத் திறன் மூலம் மக்கள் மனதில் மிக சுலபமாக இடம்பிடித்துவிட்டார். சிவாஜி கணேசன் கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அறுபதுகளில் சிவாஜியின் சம்பளம் 2.5 லட்சமாகும். சில படங்களில் எம் ஜி ஆருக்கு இணையான சம்பளம்.
ஜெமினி கணேசன்: தமிழ் சினிமாவில் அப்போதைய காலகட்டத்தில் காதல் மன்னன் என்றால் அது ஜெமினி கணேசன். இவரும் சாவித்திரியும் நடித்த பல படங்கள் வெற்றியை அள்ளித் தந்தது. ஜெமினிகணேசன் 75 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளார்.
எம் என் நம்பியார்: எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்தவர் எம்என் நம்பியார். அப்போதே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நம்பியார் நடித்துள்ளார். அறுபதுகளில் நம்பியார் ஒரு படத்திற்கு 25 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளார்.
எம் ஆர் ராதா: எம்ஜிஆர் க்கு இணையான புகழை கொண்டவர் எம் ஆர் ராதா. பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் மிகப் பெரிய பேரை வாங்கிக் கொடுத்தது. அப்போதைய காலகட்டத்தில் ஒரு படத்திற்கு 10 ஆயிரம் சம்பளம் பெற்றார் எம்ஆர்ராதா.
ஆர் முத்துராமன்: அப்போதைய முன்னணி நடிகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்தவர் ஆர் முத்துராமன். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இவர் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் நம்பியாருக்கு இணையாக பத்தாயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளார்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர்: காதலிக்க நேரமில்லை, குமரிப்பெண், நான்கு சுவர்கள் போன்ற படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இதேபோல் இரவும் பகலும், பஞ்சவர்ணக்கிளி, குழந்தையும் தெய்வமும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெய்சங்கர். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் அறுபதுகளில் தலா 8000 சம்பளமாக பெற்றுள்ளனர்.