சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சுதந்திரத்திற்கு முன் பிறந்த 6 சினிமா நட்சத்திரங்கள்.. கடைசி வரை கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவே நடித்த டெல்லி கணேஷ்

Cinema stars: சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே பிறந்து, அப்போது இருந்த சூழ்நிலையிலும் வளர்ந்து சினிமா துறையின் வளர்ச்சிகளை படிப்படியாக பார்த்து, அனைத்தையும் கரைத்துக் குடித்து, பல திறமைகளை  உள்ளே அடக்கி கொண்டு, தற்போது உள்ள சூழ்நிலைகளும் புரிந்து நடித்துக் கொண்டிருக்கும் மாபெரும் பிரபலங்கள் ஓர் கண்ணோட்டம்.

கவுண்டமணி: கவுண்டமணி 1939 ஆம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். சில சமயங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் தமிழில் 60களில் ஆரம்பித்து தனது தனித்துவமான நடிப்பினால் 2010 ஆம் ஆண்டு வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவைகள் அனைத்தும் ரசிகர்களால் தற்போதும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

Also Read:வீட்ல யாரும் இல்ல கொஞ்சம் வந்துட்டு கதை கேட்டுட்டு போறியா.? ஐட்டம் நடிகையை அல்வா போல் சாப்பிட்ட இயக்குனர்

பாரதிராஜா: தமிழ் சினிமாவில் மிகவும் பரிச்சயமான இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார். இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “16 வயதினிலே”. இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் இயக்குனராக இருந்தார். நடிகராகவும் சினிமாவில் வலம் வந்தவர்.

கே ராஜன்: தமிழ் திரையுலகின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர்தான் கே ராஜன். இவர் “பிரம்மச்சாரிகள்” எனும் திரைப்பட த்தை முதலில் இயக்கியுள்ளார். இவர் 1941 ஆம் ஆண்டு பிறந்தார். 80களில் ஆரம்பித்த திரையுலக பயணத்தை, தற்போது வரை தொடர்ந்து துணிவு திரைப்படம் வரை நடித்துள்ளார்.

Also Read:இப்ப தாங்க இவரு டம்மி பீஸ்.. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 5 படங்கள்

விஜயகுமார்: 1943இல் பிறந்து “ஸ்ரீ வள்ளி” என்ற திரைப்படத்தில் 1961இல் குழந்தை முருகராக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானவர்தான் விஜயகுமார். இவர் பொண்ணுக்கு தங்க மனசு, இன்று போல் என்றும் வாழ்க, தீபம் நீயா, அவள் ஒரு தொடர்கதை போன்ற 400 திரைப்படங்களுக்கு மேல் இவர் நடித்து விட்டார். இவர் சப்போர்ட்டிங் நடிகராகவே அதிகபட்சம் நடிப்பார். தங்கம், வம்சம் போன்ற சீரியல்கள் நடித்துள்ளார்.

டெல்லி கணேஷ்: தமிழ் சினிமாவில் 1970களில் ஆரம்பித்து தற்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் தான் டெல்லி கணேஷ். 1944ல் பிறந்தவர், கிட்டத்தட்ட 400 திரைப்படங்களுக்கு மேலே நடித்து இருக்கிறார். இந்திய விமானப்படையிலும் இவர் வேலை செய்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற எக்கச்சக்க திரைப்படங்களில் சப்போர்ட்டிங் மற்றும் காமெடி நடிகராகவும் நடித்து உள்ளார். குறிப்பாக அபூர்வ சகோதரர் திரைப்படத்தில் வில்லத்தனமாகவும் நடித்துள்ளர். தற்போது கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read:ரவீந்தர், மகாலட்சுமி காதலை அம்பலப்படுத்திய பயில்வான்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்ட கேவலம்

தியாகராஜன்: 1981ல் “அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் தியாகராஜன். 1946ல் பிறந்தவர், இவர் நடிகர் பிரசாந்தின் தந்தை ஆவார். 80ல் ஆரம்பித்த இவரின் பயணம் 2020 வரை தொடர்ந்தது. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எண்ணில் அடங்காதவை. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

Trending News