தமிழ்சினிமாவில் வெளியாகும் அண்ணன்-தங்கை சென்டிமென்ட் திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களிடம் அதிக கவனம் பெறுகிறது. அந்த வகையில் திரையரங்கையே தங்கச்சி சென்டிமென்ட்டால் மொத்த கண்ணீரையும் வெளியே எடுத்த படங்களை ரசிகர்கள் தற்போதும் தொலைக்காட்சியில் ரிப்பீட் மோடில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கிழக்குச் சீமையிலே: 1993ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அண்ணனாக விஜயகுமாரும் தங்கச்சியாக ராதிகாவும் தங்கச்சியின் கணவராக நெப்போலியனும் நடித்திருப்பார்கள். இதில் திருமணத்திற்குப் பிறகு தங்கச்சி இடம் பிறந்த முதலிலிருந்தே வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்த முடியாமல், விஜயகுமார்-ராதிகாவின் பாசப் போராட்டத்தை அழகாக காட்டப்பட்டிருக்கும். மேலும் தங்கச்சி வீட்டுக்கு சீர்வரிசை கொண்டு செல்லும் போது ஒலிக்கும் ‘மானூத்து மந்தையிலே’ என்ற பாடல் இன்றும் எந்த வீட்டு விசேஷத்திலும் மாமன் சீர் கொண்டு போகும் போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
முள்ளும் மலரும்: 1978ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்ற புத்தகத்தின் அடிப்படையாக எடுக்கப்பட்டது. இதில் அண்ணனாக ரஜினிகாந்த்தும், தங்கச்சியாக ஷோபாவும் நடித்து அசத்தி இருப்பார்கள். பாசமாக வளர்க்கும் தங்கச்சி தனக்கு பிடிக்காதவனை காதலிக்கும்போது, அவர்களது திருமணத்திற்கு குறுக்கே நிற்கிறான்.
அந்த சமயத்தில் ரஜினிக்கு எதிர்பாராதவிதமாக கை இழக்க நேரிடுகிறது. இதனால் வேலையையும் இழக்கிறான். எனவே அண்ணனின் கஷ்டத்தை குறைக்கும் நோக்கத்தில் தன்னைக் காதலிக்கும் நல்ல பையனை ஊராரின் ஒத்துழைப்பில் அண்ணனின் மீறி தங்கச்சி திருமணம் செய்து கொள்ள கிளம்புகிறாள். இதை அறிந்த அண்ணன் பதறியடித்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்று தங்கச்சியிடம் உருகி பேசுகிறான். ஒரு கட்டத்தில் அண்ணன் தான் முக்கியம் காதலனை துறந்த தங்கச்சிக்கு அவளுடைய காதல் புனிதமானது என ரஜினியே அவர்கள் இருவரையும் கடைசியில் சேர்த்து வைத்துவிடுவான்.
பாசப் பறவைகள்: 1988 ஆம் ஆண்டு கொச்சி ஹனீஃபா இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், ஏற்கனவே 1986 ஆம் ஆண்டு ஹனீபாவின் சொந்த மலையாளப் படமான மூனு மாசன்களுக்கு மும்புவின் ரீமேக்காகும். இந்த படத்தில் அண்ணனாக சிவக்குமாரும் தங்கச்சியாக ராதிகாவும் நடித்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் ராதிகாவின் கணவன் மோகனை டாக்டராக இருந்த சிவக்குமார்தான் கொன்று விட்டார் என சதிகாரர்கள் திட்டமிட்டு சிவக்குமாரை குற்றவாளியாக சித்தரித்தார்கள்.
இதற்காக ராதிகாவும் சிவக்குமாருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமென கோர்ட்டில் வாதாடுகிறார். மறுபுறம் சிவகுமாரை காப்பாற்ற சிவகுமாரின் மனைவி லக்ஷ்மியும் வாதாடுவாள். கடைசியில் தன்னுடைய தங்கைக்காக உயிரையும் துறக்க தயார் என தன் மீது தவறில்லை என்பதை சிவக்குமார் நிரூபிக்க கடைசியில் அண்ணன் தங்கை மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
சமுத்திரம்: 2001 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ் ஆகிய மூன்று அண்ணன்களுக்கு தங்கச்சியாக பாசமாக வளர்க்கப்படும் தங்கை காவேரி, சதிகாரர்கள் இடம் மாட்டிக்கொண்டு அவர்களது குடும்பத்திற்கு மருமகளாக செல்வதாள். அவளை சித்திரவதை செய்வதுடன் அண்ணனிடம் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் வாங்கி வரச் சொல்வார்கள். இதனால் தங்கச்சிக்காக அனைத்தையும் இழந்த அண்ணன்கள், ஒருகட்டத்தில் தங்கையை கொடுமை படுத்துகிறார்கள் என்பதை தெரிந்ததும் கொந்தளித்து அவர்களை அடித்து உதைத்து அவர்களிடம் இருந்து தங்கச்சியை மீட்டெடுப்பார்கள். கடைசியில் தங்கச்சி வீட்டுக்காரரும் திருந்திவிடுவான்.
வேலாயுதம்: சுமார் 60 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அண்ணன் தங்கச்சி பாசத்தை அழகாக காட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மாஸ் ஹீரோ தளபதி விஜய்க்கு தங்கச்சியாக சரண்யா மோகன் நடித்திருப்பார். தங்கச்சியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை எடுக்க சீட்டு கம்பெனி அணுகியபோது, பமர மக்களை ஏமாற்றியதால் கேள்வி கேட்டபோது அவர்களை பகைத்துக் கொள்வான். இதனால் விஜய்க்கு போட்ட வலையில் சரண்யா சிக்கிக்கொண்டு தன்னுடைய அண்ணனுக்காக உயிரை கொடுக்க சரண்யா துணிந்து விடுவாள். எனவே தங்கச்சியின் உயிரைப் பறித்த அவர்களை பழி வாங்கும் நோக்கத்தில் வேலாயுதம் என்ற பெயரில் வேடமணிந்து அக்கிரமம் செய்பவர்களை வேரறுப்பான்.