சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வயிறு குலுங்க சிரிக்க வைக்க டாப் 7 காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம்.. வடிவேலு முதல் யோகி பாபு வரை

Top 7 comedians salary in Kollywood : திரைப்படத்திற்கு எப்படி ஹீரோ, ஹீரோயின் ரொம்ப முக்கியமோ, அதைபோல் நகைச்சுவை நடிகர்களும் மிக முக்கியம். எவ்வளவுதான் ஆக்சன், ரொமான்டிக் காட்சிகளை அடுக்கி வைத்திருந்தாலும், நகைச்சுவை இல்லை என்றால் உப்பில்லாத சாப்பாடு குப்பையிலே என்பதற்கு சமம் தான். தற்போது வரை வயிறு குலுங்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் 7 காமெடி நடிகர்கள் யார், அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

வடிவேலு: வைகை புயல் வடிவேலு இந்த லிஸ்டில் 7 இடத்தில் உள்ளார். இவரை தெரியாமல் யாருமே இருக்க முடியாது, இவர் இல்லாமல் எந்த மீம்ஸும், ட்ரோல்சும் டிரெண்ட் ஆகாது. அந்த அளவுக்கு நகைச்சுவையில் முடி சூடா அரசனாக இருப்பவர். சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது ராகவா லாரன்ஸ் கூட்டணியில் சந்திரமுகி திரைப்படத்தில் மீண்டும் கம்பேக் குடுத்து இருக்கிறார். இப்போது 8- 10 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கிறார்.

Also Read:ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.. காட்டுத்தீயாய் பரவும் அனிமல் பட போஸ்டர்

மனோபாலா: 6வது இடத்தில் இருக்கும் இவர் சுமார் 700 திரைப்படங்களுக்கு மேலே நடித்து, நன்கு பரீட்சையமானவர்தான் மனோபாலா. இயக்குனராகவும் 25 படங்களை இயக்கியுள்ளார், தயாரிப்பாளர், துணை நடிகர் என தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்துள்ளார். 10-15 லட்சம் வரை ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக வாங்கியவர். சமீபத்தில் இவர் மரணம் ரசிகர்களை உலுக்கியது.

RJ பாலாஜி: 5வது இருப்பவர் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி தற்போது இயக்குனர், கதாநாயகன், கிரிக்கெட் கமாண்டர் என வளர்ந்து இருப்பவர் R J பாலாஜி. சிரிப்பு வர வைக்கும் அளவிற்கு எதார்த்தமாக நடிப்பார். இவர் 10-15 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

ரெடிங் கிங்ஸ்லி: 4வது இடத்தில் இருப்பவர் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற திரைப்படங்களினால் பயங்கர பேமஸ் ஆனவர் ரெடிங் கிங்ஸ்லி. தற்போது இவர் இல்லாமல் ஒரு படங்கள் கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு தனித்துவமாக பேசும் விதத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தொடர்ந்து நிறைய படங்கள் நடித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு படத்திற்கு 15-25 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

Also Read:ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி.. விடாமுயற்சிக்காக ஸ்மார்ட்டாக மாறிய அஜித்தின் நியூ லுக்

சூரி: மூன்றாவதாக இடத்தில் இருப்பவர் பரோட்டா சூரி. சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு, ஜில்லா போன்ற படங்களில் அட்டகாசமாக நடித்து இருப்பார். கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் நன்றாக பயன்படுத்திக்கொண்டு, தற்போது உள்ள 2கே கிட்ஸ்கள் வரை தனது காமெடிகளால் ஈர்த்தவர். ஒரு படத்துக்கு 25-40 லட்சம் சம்பளம் வாங்குகிறார்

சந்தானம்: 2வது இடத்தில் இருப்பவர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் தொடங்கி, முன்னேறி சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களின் மூலம் தனது தனித்துவத்தை காட்டினார். நகைச்சுவை நடிகரிலிருந்து கதாநாயகனாக நடிக்க தொடங்கி விட்டார். ஒரு திரைப்படத்திற்கு நாள் ஒன்றுக்கு 15 லட்சம் விதம் முழு படத்துக்கு 5 கோடி வரை சம்பாதிக்கிறார்.

Also Read:இந்தியன் 2-வில் நடித்து ரிலீசுக்கு முன்னரே மரணித்த 4 பிரபலங்கள்.. உயிர் பயத்தை காட்டிய கெட்ட நேரம்

யோகி பாபு: முதல் இடத்தில் ஒய்யாரமாக இருப்பவர் யோகி பாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியில் தனது பயணத்தை தொடங்கி, தற்போது இவர் இல்லாமல் ஒரு திரைப்படங்கள் கூட வெளிவருவது கிடையாது. அவ்வளவு டிமாண்ட் அதிகமாக இருப்பவர். மான் கராத்தே, காக்கா முட்டை, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஒரு நாளைக்கு 14 முதல் 15 லட்சம் வீதம் ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

Trending News