புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உங்க சகவாசமே வேண்டாம் என அக்கட தேசம் படையெடுத்த 3 தமிழ் இயக்குனர்கள்.. அஜித் விஜய் கூட அவசியமில்லை

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா பக்கம் நம்முடைய தமிழ் சினிமா கலைஞர்கள் செல்வது வாடிக்கையாகிவிட்டது. நடிகர்கள்தான் தற்போது பான் இந்தியா, படமாக தங்களுடைய படம் அமைய வேண்டும் என்றும், தெலுங்கு சினிமாவிலும் நாம் நல்ல பெயர் அடைய வேண்டும் என்றும் தெலுங்கு மொழிகளில் வரக்கூடிய படங்களுக்கும் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதே பாணியில் தற்போது தமிழ் இயக்குனர்களும் தொடர ஆரம்பித்து இருக்கின்றனர்.

அந்த வரிசையில் இயக்குனர் ஷங்கர், முருகதாஸ், லிங்குசாமி போன்ற தமிழில் பிரபலமான இயக்குனர்கள் பலர் தெலுங்கு மொழிகளுக்கு தற்போது படை எடுத்து இருக்கின்றனர். தமிழ் மொழியில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களில் மற்றும் வசூலை வாரி குவித்த படங்களையும் கொடுத்த இயக்குனர்கள் தான் இந்த சங்கர் முருகதாஸ் மற்றும் லிங்குசாமி அவர்கள் ஆனால் இந்த இயக்குனர்கள் இப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டுவது இல்லை.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்தை வைத்து எந்திரன் என்ற படத்தை கொடுத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து, உலகத்தரத்தில் அந்த படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால், அதன் பின் ஏனோ ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்ற பெயரோடு அவர் தமிழ்சினிமாவை விட்டு நகர்ந்து விட்டார். அதன் பின் தமிழ் மொழியில் அவர் பெரிதான பெரிய படங்கள் எதுவும் இயக்கவில்லை. தற்போது தெலுங்கில் பிரபலமான நடிகரான ராம் சரணை வைத்து, RC 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

அதேபோல, இயக்குனர் ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கம் தவிர்த்து, பல படங்களை தயாரித்தும் சில படங்களுக்கு திரைக்கதை அமைத்தும், தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு இருந்தாலும், தற்போது அவருக்கான வாய்ப்பு தமிழ் சினிமாவில் மங்கிவிட்டது. கதை திருட்டு வழக்கு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் முருகதாஸ் ஒதுக்கப்பட்ட இயக்குனர்களின் வரிசையில் தள்ளப்பட்டு இருக்கிறார். இவரும் இப்போது தெலுங்கு சினிமா உலகில் கையில் நல்ல கதையோடு, பெரிய வாய்ப்பிற்க்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவரும் தெலுங்கில், இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து, ஸ்பைடர் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் நைசாக சாய ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கி முன்னணி நடிகரான ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் ,அஜித் ,ரஜினி,கமல் போன்றவர்கள் தற்போது அதிகமாக புதிதாக வரக்கூடிய இளம் இயக்குனர்களுக்குத்தான் தங்களுடைய படத்தை இயக்க வாய்ப்புகளை தேட ஆரம்பித்துவிட்டனர் .மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக ஏதாவது தோசை சுடலாம் என்று தமிழ் நடிகர்கள் கொஞ்சம் மாறி இருக்கின்றனர்.

ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல என்று கூறப்படுகிறது. என்ன காரணம் என்றால் இங்கு வருடத்திற்கு நான்கு படங்கள் எடுத்து 4 படமும் ஹிட் கொடுத்தாலும், அது அத்தனையும் அதில் நடித்த நடிகர் பக்கம் மட்டுமே புகழ் போய் சேருகிறது. ஆனால், தெலுங்கில் அப்படி கிடையாது . ஏகப்பட்ட பணம் கொடுத்து இயக்குனர்களை செல்லப்பிள்ளையாக பார்த்துக்கொள்வார்கள் . அவர்களின் திறமைக்கேற்ற உண்மையான மரியாதை அங்கு கிடைக்கும். மிகையாக சொல்ல வேண்டுமென்றால் தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது இதனால்தான் தெலுங்கு பக்கம் இந்த இயக்குனர்கள் படையெடுத்து இருக்கின்றனர். நமக்கு பார்த்து பழகிப்போன இவர்களின் இயக்கம் தெலுங்கு பக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News