சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முதல் படத்திலேயே சினிமாவை வெறுத்துப் போன 5 இயக்குனர்கள்.. ஆனா இப்ப டாப் ஹீரோக்களுடன் கூட்டணி

தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்கள் முதல் படத்திலேயே வெற்றி பெறுவது சாதாரண காரியமல்ல. அது மட்டுமல்லாமல் தங்கள் முதல் படத்தை எடுப்பதற்குள் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். அந்த வகையில் பல இன்னல்களுக்கு பிறகு முதல் படத்திலேயே வெற்றி கொடுத்த இயக்குனர்களை பார்க்கலாம்.

தங்கர்பச்சான்: தங்கர்பச்சான் இயக்கத்தில் முதலில் உருவான படம் அழகி. இப்படத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதாதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். முதலில் அழகி படத்தை வெளியிட எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. அதன் பின்பு அவருடைய நண்பரே இப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படம் வெளியான ஒரு வாரம் வரை எந்த வரவேற்பும் இல்லை. அதன் பிறகு படத்தின் கதையை புரிந்து கொண்ட ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர படம் மிகபெரிய வெற்றி அடைந்தது.

பாலா: தமிழ் சினிமாவுக்கு சேது படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பாலா. இப்படத்தில் ஹீரோவாக முதலில் கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்த நடிகர் விக்னேஷ் வைத்து பாலா சேது படத்தை எடுத்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக படம் தொடங்கி சில நாட்களிலேயே நின்று போனது. சில காலங்களுக்குப் பிறகு விக்ரமை வைத்து மீண்டும் சேது படத்தை பாலா எடுத்து முடித்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றிமாறன்: பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அது ஒரு கனா காலம் படத்தின் மூலம் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் நட்பு மலர்ந்துள்ளது. வெற்றிமாறன் தனுஷிடம் ஒரு கதை கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை 47 என்ற பெயரும் வைத்து இரண்டு நாள் சூட்டிங் சென்றது.

அதன் பிறகு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தனுஷின் திருவிளையாடல் படம் வெளியாகி தனுஷின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. அதன் பிறகு மீண்டும் வெற்றிமாறன் அதே படத்தை தொடங்காமல் தன்னுடைய சொந்த கதையான பொல்லாதவன் படத்தை தனுஷை வைத்து எடுத்தார். அதன் பிறகு இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஹெச் வினோத்: ஹெச் வினோத் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் தன்னுடைய கதையை பல தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். ஆனால் யாரும் இவரை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு வினோத், நலன் குமாரசாமியிடம் தன் கதையை கூறியுள்ளார். அப்போது தயாரிப்பில் இறங்கியிருந்த மனோபாலாவிடம் நல்ல கதை உள்ளது என நலன் கூறியுள்ளார். அதன்பிறகு சதுரங்க வேட்டை படத்தை மனோபாலாவே தயாரித்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் கனகராஜ் 2016ம் ஆண்டு அவியல் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற நம்பிக்கையில் பல கதாநாயகர்களிடம் தயாரிப்பாளர்களிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் குறும் படம் எடுப்பதற்கு முன்பு சினிமாவில் நுழைந்து விட்டேன் கிட்டத்தட்ட சில வருடங்கள் கதை எழுதுவது கதாநாயகர்களிடம் கதை சொல்லுவது தயாரிப்பாளர் போய் பார்ப்பது போன்ற வேலைகளை தான் தொடர்ந்து செய்து வந்தேன். பின்பு பல வருடங்களுக்கு பிறகு தான் மாநகரம் எனும் படத்தை எடுத்து அதன் மூலம் இயக்குனராக அறிமுகமானேன் என தெரிவித்தார்.

Trending News