ஒரு இயக்குனராக வேண்டும் என்றால் சினிமாவில் முதலில் பல வருடங்கள் போராட வேண்டியிருக்கிறது. வாய்ப்பு கிடைக்காமல் காத்திருப்பது, கதையை சொல்லி நிராகரிக்கப்படுவது, பல அவமானங்களை சந்திப்பது என நிறைய விஷயங்களை கடந்து வந்துதான் ஒரு இயக்குனர் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கிறார்.
ஆனால் இப்போது ஒரு வித்தியாசமான மாற்றம் தமிழ் சினிமாவில் தெரிகிறது. இயக்குனராக வெற்றி பெற்ற பிறகு, தங்களுடைய அடுத்த கட்ட பயணத்தை தயாரிப்பாளராகவும் தொடர வேண்டும் என்று பல இளம் இயக்குனர்கள் முடிவு செய்து வருகிறார்கள்.
இதற்கு நல்ல உதாரணமாக நெல்சனை சொல்லலாம். கவினை வைத்து அவர் ஒரு படத்தை தயாரித்தார். அதேபோல் அட்லியும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜும் G Squad நிறுவனம் தொடக்கி படம் தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜும் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இப்போது இந்த பட்டியல் இன்னும் நீள்கிறது. பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். மாரி செல்வராஜும் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். தேசிங்கு பெரியசாமியும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இதற்கெல்லாம் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு இயக்குனராக ஒரு படத்தை உருவாக்கும்போது, தயாரிப்பாளரிடம் பல விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் தயாரிப்பு நிறுவனமே தங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால், தங்களுக்கு பிடித்த கதைகளை உருவாக்குவதற்கும், புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்துவதற்கும் அதிக சுதந்திரம் கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இயக்குனர்களுக்கு கதைகளை எப்படி தேர்வு செய்வது, ஒரு படத்தை எப்படி உருவாக்குவது, எந்த நடிகர் அந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்பதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவத்தை தயாரிப்பிலும் பயன்படுத்த முடியும்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்று ஒரு வெற்றிகரமான இயக்குனருக்கு அவருடைய பெயரே ஒரு பிராண்டாக மாறிவிடுகிறது. அந்த பெயரை வைத்து புதிய இயக்குனர்களையும் நடிகர்களையும் அறிமுகப்படுத்த முடியும்.
அதனால் இப்போது இளம் இயக்குனர்களின் கனவு வெறும் “நான் ஒரு நல்ல இயக்குனராக வேண்டும்” என்பதோடு முடிவதில்லை. “நான் நல்ல படங்களை தயாரிக்க வேண்டும், புதிய திறமைகளை அறிமுகப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் மட்டும் இல்லை. படம் ஹிட் ஆனால் பணம் கொட்டும்.




