ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2023 முடிவுக்கு வரும் 10 படங்கள்…சரக்கை நம்பி இருக்கும் மன்சூர்அலிகான்!

Tamil Films will be released on end of december: 2023 முடிவுக்கு கொண்டு வரும் விதமாக டிசம்பர் 29 அன்று பல படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றன. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்ற விதமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள வரிசை கட்டி உள்ளன இப்படங்கள். அவற்றில் சில,

வட்டார வழக்கு: 40 வருடங்களுக்கு முன் மதுரையைச் சார்ந்த கிராமத்தின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள படம் வட்டார வழக்கு. கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து உள்ளார். இசைஞானி இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

நந்திவர்மன்: பல்லவர்களின் வரலாற்றை அறியும் நோக்கோடு வரும் தொல்பொருள் ஆராய்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதனை துப்பறியும் டிரில்லர் வகை கதையே நந்திவர்மன். பெருமாள் வர்தன் இயக்கத்தில் சுரேஷ் ரவி,ஆஷா கவுடா, போஸ் வெங்கட், நிழல்கள் ரவி போன்ற பலர் நடித்துள்ளனர்.

Also Read:2023 இல் கதைக்காக மட்டுமே ஓடிய 6 படங்கள்.. ஹரிஷ் கல்யாணை புரட்டி எடுத்த MS பாஸ்கர்

ரூட் நம்பர் 17: அபிலாஷ் தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ரூட் நம்பர் 17. இப்படத்திற்காக பூமிக்கு அடியில் குகை போல் செட் அமைத்து பல நாட்கள் பணியாற்றியுள்ளனர். க்ரைம் திரில்லர் ஆக  உருவாகியுள்ள படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் மனிதன்: நீண்ட இடைவெளிக்குப்பின் பாக்கியராஜ் முக்கிய ரோலில் துப்பறிவாளனாக  நடிக்கும் படமே மூன்றாம் மனிதன். ராம்தேவ் இப்படத்தை தயாரிப்பதோடு இயக்கவும் செய்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சோனியா அகர்வால், ராணா, ஸ்ரீகாந்த் போன்றோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாரதிராஜா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சரக்கு: லியோவின் சர்ச்சைகளுக்கு பின் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் சரக்கு. மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக விளக்கியுள்ள படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். சர்ச்சைகளுக்கு நடுவே சரக்கையும் ப்ரமோட் செய்திருந்தார் மன்சூர் அலிகான். நீண்ட நாளுக்குப் பின் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவதால் இப்படத்தை நம்பி அரசியலிலும் களம் இறங்க உள்ளார் மன்சூர்.

மதிமாறன்: அதிரடியான திரில்லர் கதையுடன்  லவ் டுடே இவானா வெங்கட்செங்குட்டுவன் மற்றும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் மதிமாறன். உருவகேலியை முன்னணியாக வைத்து மாறுபட்ட திரை கதையை வடிவமைத்து உள்ளார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்.

இவை தவிர யாவரும் நல்லவரே, ஜெய் விஜயம், பேருக்கு கல்யாணம், மூத்த குடி  போன்ற படங்களும் டிசம்பர் 29 ரிலீஸ் ஆக உள்ளன.

Also Read: 2023ல் நல்ல கதை கரு இருந்தும் மக்களிடம் போய் சேராத 5 படங்கள்.. கொண்டாட முடியாமல் போன சோகம்

Trending News