வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

அந்த மாதிரி விஷயத்தில் தமிழ் ஹீரோக்கள் ரொம்ப மோசம்.. கழுவி ஊற்றிய நித்யா மேனன்

Actress Nithya Menon: குஷ்புக்கு அடுத்தபடியாக சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன். கடைசியாக தமிழ் சினிமாவில் அவருடைய நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தாய்க் கிழவியாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டு சென்றார்.

இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தான் ஹீரோயின் நடிக்க வேண்டும் என்பதற்கு விதிவிலக்காக நல்ல கதாபாத்திரங்களாக இருந்தால் நித்யா மேனன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறிய சம்பவம் தான் இப்போது கோலிவுட் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read : பாத்தா உளுந்த வடை பிச்சு பாத்தா ஊசுன வடை.. அப்பாவை அட்ஜஸ்ட்மென்ட் செய்து மகனை கல்யாணம் செய்த நடிகை

அதாவது சினிமாவை பொருத்தவரையில் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பதாக பலர் சொல்லி உள்ளனர். அதுவும் பிரபல நடிகைகளே இது பற்றி சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கின்றனர். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் தங்களை அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டுள்ளதாக வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.

சில நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ததாகவும் ஒத்துக்கொண்டு உள்ளார்கள். ஆனால் சில நடிகைகள் திறமையை மட்டுமே நம்பி சாதித்தவர்களும் உண்டு. இந்நிலையில் நித்யா மேனன் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது தமிழ் ஹீரோவால் தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்துள்ளதாக நித்யா மேனன் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Also Read : ஹீரோவை பாடாய்படுத்தும் சீரியல் நடிகை.. பட வாய்ப்புக்காக செய்யும் எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்

நித்யா மேனன் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சில படங்கள் தான் நடித்திருக்கிறார். விஜய், தனுஷ், உதயநிதி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு இருக்கிறார். இந்த சூழலில் திடீரென நித்யா மேனன் இப்படி கூறியுள்ளதால் யார் அந்த ஹீரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் தான் இது போன்ற பிரச்சனை சந்தித்ததாகவும், தெலுங்கு சினிமாவில் இப்படி எனக்கு நடந்தது இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும் பல நடிகைகள் தமிழ் இண்டஸ்ட்ரியல் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார். தமிழ் ஹீரோக்கள் இவ்வளவு மோசமாகவா இருப்பார்கள் என பலரும் நித்யா மேனன் பேட்டிக்கு கீழே கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு பணியாத நடிகை.. காட்சிகளில் நெருக்கத்தை கூட்டி அனுபவித்த நடிகர்

Trending News