திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க சித்தார்த்.. பில்டப் கொடுத்து சூடான தோசை கல்லில் உட்கார்ந்த 5 நடிகர்கள்

Tamil heros and their loose talk: எதை காக்காமல் விட்டாலும்  தன்  நாவையாவது காத்துக் கொள் என்றார் வள்ளுவர். கேட்டார்களா இவர்கள்? பில்டப் கொஞ்சமா ஏத்துறேன் என்கிற பெயரில் மொத்தமாக முக்காடு போட்டுக் கொண்டனர்.

ஜெய்: ட்ரங்க் அண்ட் ட்ரைவ் கேஸ்க்களில் வாண்டட் ஆக சிக்கிக்கொண்ட சுப்பிரமணியபுரம் ஜெய் அவர்கள் போலீசிடம் மாட்டிய பின், பொதுமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் யாரும் என்னைப் போன்று அதிகமாக ஒலிக்கும் சைரன் வைத்து கார் ஓட்டாதீர்கள் என்று சொற்பொழிவு ஆற்றினார்.

அஸ்வின்: வாய்ப்பிற்காக காலம் காலமாக காத்துக் கிடந்து வாய்ப்பு வந்தவுடன் தலைக்கனத்துடன் நடந்து கொள்வது சரியானது அல்ல இதை சரியாக உணர்ந்து உள்ளார் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின். “என்ன சொல்லப் போகிறாய்” பட விழாவில் கலந்து கொண்ட அஸ்வின் 40  கதை கேட்டு தூங்கி விட்டேன் என்று கூறியது திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது இதற்காக இவர் சந்தித்த விளைவுகளோ ஏராளம்.

Also Read:இதோட நிறுத்திக்கங்க! இல்லனா பிரளயமே வெடிக்கும் என எச்சரிக்கும் மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்:  லியோ பட விழாவில் காமெடியாக பேசுகிறேன் என்ற பெயரில் இவர் பேசிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் இவருக்கே  ஆப்பாக மாறியது. இவர் செய்தியாளர்களிடம் நான் தவறான எண்ணத்தோடு பேசவில்லை இதோடு நிறுத்திக்கங்க என்று கதறிய நிலையிலும் யாரும் விடுவதாக இல்லை. இறுதியாக திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 சித்தார்த்:சமூக வலைதளங்களில்  தன்னை ஆக்டிவாக வைத்திருக்கும் சித்தார்த் பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில்  ஏற்பட்ட குறைபாட்டிற்கு சாய்னா நேவால் டுவிட் போட்டதை அடுத்து சித்தார்த் இவருக்கு எதிராக டுவிட் போட சர்ச்சை பல கோணங்களிலும் வெடித்தது. அவமரியாதை படுத்துவது என் நோக்கமல்ல என பலவாறு வேண்டி சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார்.

பிரகாஷ் ராஜ்: சந்திரயான் 3  விண்கலம் குறித்த பதிவில் தேநீர் ஆத்துவது போல் புகைப்படம் போட்டு விஞ்ஞானிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தி இருந்தார்.  நான் ஒரு நகைச்சுவை நோக்கில் இதை பதிவிட்டேன் என்றார் பிரகாஷ்ராஜ். இந்தியாவின் சாதனை இவருக்கு காமெடியாக  இருக்கிறதா என பல தரப்பிலும் கண்டனங்கள்  வந்த வண்ணம் இருந்தது.

எதுக்கு வாய விடனும் என் வாங்கி கட்டிக்கணும் என்பது போல் நடிகர்களின் இச்செயல்கள் அமைந்து இருந்தன. அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்பது உண்மையே.

Also Read:கட்டத்துரைக்கு கட்டமே சரியில்ல.. நாலா பக்கமும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு போடப்பட்ட கேட்

Trending News