ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

அடுத்த ரஜினிகாந்த்தாக வளர விடாமல் தடுக்கப்பட்ட ஹீரோ.. சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றிய நட்பு வட்டாரம்

சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அதுவும் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று தற்போது அவரின் ரசிகர்கள் உட்பட திரையுலகில் பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அந்த இடத்தை பிடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அந்த இடம் மட்டும் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்களும் ரஜினிகாந்த் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறி ஒதுங்கிக் கொண்டனர். இந்நிலையில் 80 காலகட்டத்தில் ரஜினிக்கு இணையாக அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜயகாந்த்.

ஒரே வருடத்தில் மட்டும் அவர் ஹீரோவாக 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டானது. இதனால் அவருக்கு ரஜினிக்கு இருந்ததை போலவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

சொல்லப்போனால் ரஜினிக்கு இணையாக அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் இருந்தார்கள். இதை கவனித்த சில சினிமா வட்டார மக்கள் இப்படியே இவரை விட்டால் பெரிய ஆளாக வளர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டாராக மாறிவிடுவார் என்று பொறாமைப்பட்டது.

இதனால் அவரை சூழ்ச்சி செய்து கீழே இறக்க பல சதி வேலைகளை செய்தது. அதன் காரணமாக மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜயகாந்தை வில்லனாக தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகியது. அதன் உள்நோக்கத்தை அறியாத விஜயகாந்தும் அந்த கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டார்.

ஆனால் அந்த சமயத்தில் அவரின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் தான் நீ இப்பொழுது தான் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறாய் அதனால் நீ ஹீரோவாக மட்டும் நடித்தால் போதும். வில்லனாக நடிக்க வேண்டாம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடு என்று கூறியிருக்கிறார்.

நண்பரின் பேச்சை தட்டாத விஜயகாந்தும் அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். அதன் பிறகு அவர் ஹீரோவாக மட்டுமே திரைப்படங்களில் நடித்தார். அந்த வகையில் விஜயகாந்த் பெரிய அளவில் பேரும், புகழும் அடைந்ததற்கு அவருடைய நண்பர் இப்ராஹிம் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

Trending News