திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 5 சிறந்த இசையமைப்பாளர்கள்.. ஹிட்டு கொடுத்தும் ஒதுக்கிய சினிமா

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்கள் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தற்போது அனிருத், இப்படி உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள இசையமைப்பாளர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் இன்று வரைக்கும் மக்களுக்கு அறிமுகமாகி உள்ளது.90 காலகட்டத்தில் பல இசையமைப்பாளர்கள் பழகிப் கொடுத்தும் இன்று காணாமல் போயுள்ளனர். அவர்களில் சில பேர்

பிரவின் மணி: இவர் இசையமைத்த திரைப்படங்கள் லிட்டில் ஜான், ஒற்றன் படத்தில் சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா, தூத்துக்குடி படத்தில் கருவா பையா பாடல், விஜயகாந்த் நடிப்பில் பேரரசு திரைப்படத்தில் பொண்டாட்டியா நீ வந்தா கொண்டாட்டம் தான் எனக்கு என்று இன்னும் முக்கிய படங்களில் பணியாற்றி இன்று தமிழ் சினிமாவில் காணாமல் போயுள்ளார்.

விஷால் சந்திரசேகர்: இவர் இசையமைத்த திரைப்படங்கள் அப்புச்சி கிராமம் படத்தில் என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி பாடல், ஜில் ஜங் ஜக் படத்தில் ஷூட் தே குருவி பாடல், ஓமன பெண்ணே, குற்றம் 23, கி, போன்ற முக்கிய திரைப்படங்களில் இசையமைத்துள்ளார் இன்று இவர் யாரும் கண்டுகொள்ளவில்லை.

எஸ்.எஸ்.குமரன்: இவர் இசையமைத்த திரைப்படங்கள் பூ, களவாணி, தேநீர் விடுதி இன்னும் சில பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார் இன்று இவர் இருக்குமிடம் தெரியவில்லை.

ரமேஷ் விநாயகம்: இவர் இசையமைத்த திரைப்படங்கள் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க யுனிவர்சிட்டி, நலதமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி இன்னும் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் இன்று இவர் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆர்.பி பட்நாயக்: இசையமைத்து திரைப்படம் இரண்டு மட்டுமே ஜெயம், பழைய பாக்கி ஜெயம் திரைப்படத்தின் பாடல்கள் படத்திற்கும் சரி அந்த படத்தின் வெற்றிக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜெயம் படம் 90 இளசுகளின் முக்கிய திரைப்படமாகும் முக்கியமான பாடல்கள் அதில் அடங்கியுள்ளன ஆனால் இன்று இவர் தமிழ் சினிமாவில் காணாமல் போயுள்ளார்.

இதுபோல் தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் பல வெற்றிப் பாடல்களை மக்களுக்கு அளித்து இன்று அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளனர். தமிழ் சினிமாவும் இவர்களை மறந்து உள்ளது ஆனால் இவர்கள் பாடல் இன்றுவரை அனைவரும் கேட்கப்படுகிறது. இவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்க தமிழ்சினிமாவை கேட்டுக்கொள்கிறோம்.

Trending News