Oscar 2023 Nomination: இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்ட போதே தமிழ் சினிமா ரசிகர்கள் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் ஜெய் பீம் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என நினைத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது. இப்படி ஒரு சூழ்நிலையை தற்போது ஆஸ்கார் விருது தேர்வுக்கான பட்டியலில் குறிப்பிட்ட இந்த மூன்று படங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்படும். அதில் இந்த வருடம் குறிப்பிட்ட சில படங்களை தேர்ந்தெடுக்கவில்லை. இந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்படாததற்கு மொக்கையாக சில காரணங்களை சொல்லி இருப்பது இன்னுமே தமிழ் சினிமா ரசிகர்களை வெறுப்படைய செய்து இருக்கிறது. அப்படி நிராகரிக்கப்பட்ட மூன்று படங்களையும், காரணங்களையும் பார்க்கலாம்.
Also Read:சந்திரமுகி 2, இறைவன் இரண்டாம் நாள் வசூல் விவரம்.. ரஜினியின் இமேஜை காலி செய்த லாரன்ஸ்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் நடித்த மாமன்னன் படம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் பலதரப்பட்ட மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றாலும், திரை கதையில் அதிகமான கம்யூனிசம் பற்றி பேசப்பட்டு இருப்பதால் ஆஸ்கார் தேர்வில் இருந்து நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் தனுஷ் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த படம் வாத்தி. இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இன்றைய கால கல்விக்கூடங்களில் உண்மை நிலையை திரைக்கதையாகக் கொண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. இது ஆஸ்கார் வரை போனால், இந்திய கல்விக்கூடங்களின் வியாபாரம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் தேர்ந்தெடுக்கவில்லை.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. இந்த படம் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றது. ஆனால் படத்தின் கதை அரசாங்கத்திற்கு எதிரானது என்பதால் இந்த படத்தையும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்காமல் விட்டு விட்டார்கள்.
இதுவரை தெய்வமகன், நாயகன், அஞ்சலி, இந்தியன், ஜீன்ஸ், ஹேராம் விசாரணை போன்ற தமிழ் படங்கள் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த படமும் விருதை பெறவில்லை. மாமன்னன், விடுதலை, வாத்தி படங்களை நிராகரித்து விட்டு மலையாளத்தில் ரிலீசான 2018 படம் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.
Also Read:துக்கம் தொண்டையை அடைக்க வைத்த சந்திரமுகி 2.. வேட்டையன் ரஜினி சேர்த்து வச்ச பெயரை கெடுத்துட்டாங்க!