புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூப்பர் ஹிட் 6 மல்டி ஸ்டார் மூவிஸ்.. கமலை ஜெயிக்க தலைவர் செய்த பெரிய சூழ்ச்சி

Multistar Movies: சினிமாவில் பொதுவாக கதாநாயகன் ஒருவர் நடித்து திரைப்படம் வெளியாவது என்பது சாதாரணம். அதுவே திரை உலகில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கியமான பிரபலங்களைக் ஒன்று சேர்த்து கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இல்லாமல், சுவாரசியங்களும் குறை இல்லாமல் நடித்து மாபெரும் மல்டி ஸ்டார் ஹிட் படம் வெளிவருவது அபூர்வம். அப்படி திரையரங்குகளை கலக்கிய 6 மூவிஸ் என்னவென்று பார்ப்போம்.

ஆனந்தம்: 2001ல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகிய கமர்சியல் சக்சஸ் கொடுத்த திரைப்படம் ஆனந்தம். இதில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, சினேகா, ரம்பா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, மணிவண்ணன் போன்ற எக்கச்சக்க முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி வெளிவந்த படம் இது.

Also Read:ரெட் கார்டை யாரும் மதிக்காமல் செய்த ஹீரோ.. தனுஷ் அதர்வாவெல்லாம் தெனாவட்டாய் போடும் பேயாட்டம்

ஆயுத எழுத்து: 2004 இல் மணிரத்தினம் இயக்கத்தில் நிறைய பிரபலங்கள் ஒன்று கூடி நடித்து வெளிவந்த திரைப்படம் ஆயுத எழுத்து. இதில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், த்ரிஷா கிருஷ்ணன், பாரதிராஜா, விஜயகுமார், ஜெயராஜ், நிழல்கள் ரவி, அழகம்பெருமாள் போன்றோர் நடித்துள்ளனர். மூன்று வெவ்வேறு சூழ்நிலையில் வாழும் இளைஞர்களின் வாழ்க்கையும், பிறகு அவர்களின் அரசியல் ஈடுபாடு பற்றி வெளிப்படுத்துவதே மைய கருத்தாகும்.

செக்கச் சிவந்த வானம்: 2018 இல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியானது செக்கச் சிவந்த வானம். இதில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூரலிகான் போன்ற பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் இணைந்து கலக்கிய திரைப்படம்.

Also Read:கமலுக்கு பிடித்த ஒரு பெயர் எல்லா ஹீரோயினுக்கும் அதான்.. அப்படி என்ன அந்த பேர்ல இருக்குன்னு தெரியலையே.!

விக்ரம் வேதா: 2018 இல் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளிவந்து பயங்கர சக்சஸ் கொடுத்த திரைப்படம் விக்ரம் வேதா. மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி, சரத்குமார், சதா, ஸ்ரீநாத் போன்றவர்கள் நடித்துள்ளனர். விக்ரமாதித்ய வேதாளம் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் கேங்ஸ்டரை பற்றிய கதை.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பீக்கில் இருக்கும் நடிகர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் விக்ரம். ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளி வந்தது. கமல், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா போன்றோர் அதிர வைத்திருப்பார்கள். இந்த படத்திற்கு அமோக வரவேற்பும் கிடைத்தது, அட்டகாசமான வசூலையும் 400-500 கோடி வரை அள்ளி குவித்தது.

Also Read:அந்த நடிகை எனக்கு பொண்ணு மாதிரி, ஜோடி சேர முடியாது.. சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி

ஜெயிலர்: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் திரையரங்குகளை அதிர வைக்கும் அளவிற்கு மாஸ் கிளப்பிய திரைப்படம் ஜெயிலர். ரஜினிகாந்த், விநாயகன் , ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, சுனில், மேனன், யோகி பாபு, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். உலக அளவில் அதிக வசூலை பெற்ற இந்திய திரைப்படங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்தது.

Trending News