வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

7 இசையமைப்பாளர்களுக்கு அங்கீகாரம் கொடுத்த படங்கள்.. இருந்தாலும் ராஜா மாதிரி யாரும் வரல!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் பல சுவையான சினிமா செய்திகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். இந்த பதிவில் ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த பாடல்களால் ஹிட்டான திரைப்படங்களை இப்போது பார்க்கலாம். ஒரு இசை அமைப்பாளரின் பெஸ்ட் என்று நாம் இவற்றை கூறலாம்.

இதை விட இன்னும் எத்தனையோ படங்களுக்கு அவர்கள் இசை அமைத்து வெற்றி பெற்று இருந்த போதும், இந்த படங்கள் தான் அந்த படங்களின் அடையாளமாக இருக்கும். சுருக்கமாக சொன்னால், இந்த படங்களின் பாடல்கள் இல்லையென்றால் அந்த படம் அவ்வளவாக நமது மனதில் நின்றிருக்காது என்று கூட கூறலாம்.

இளையராஜா – ஆவாரம்பூ: இளையராஜாவின் இசை எத்தனையோ படங்களை, தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை காப்பாற்றி உள்ளது. மணிரத்னம் முதல், கவுதம் மேனன் வரை பல சுமார் படங்களுக்கு கூட சிறப்பான இசையை வழங்கி உள்ளார் இசைஞானி. அவரது சிறந்த படம் என்று ஒன்றை மட்டும் தேர்ந்து எடுப்பது கடலில் இருந்து ஒரு சொட்டு நீர் எடுப்பதற்கு சமானம்.

ஆவாரம் பூ படத்தை நாம் அவரது மியூசிக்கல் ஹிட் என்று எடுக்க காரணம், இந்த படத்தில் பாடல்களை, பின்னணி இசையை களைந்துவிட்டு பார்த்தால் மிக மிக ஒரு சுமாரான படமாகவே இது தோன்றும். இந்த படத்திற்கு 5 முத்தான பாட்டுக்களை அவர் கொடுத்திருந்தார்.

ரஹ்மான் – டூயட்: எத்தனையோ படங்களில் எத்தனையோ புதிய கருவிகளைக் கொண்டு நமது மனதுக்கு இதமான இசையை கொடுத்துள்ளார் இசைப்புயல். அவர் இசை அமைத்தார் என்பதற்காகவே பல மிகச்சுமாறான படங்கள் கூட பெரிய ஹிட் ஆனதை மறுக்க முடியாது. அப்படி அவர் பல தயாரிப்பாளர்களை பணக்காரர்களாகவே வைத்திருந்தார்.

கேபி, இயக்கத்தில், பிரபு, ரமேஷ் அரவிந்த் நடித்திருந்த போதும் இந்த படம் ரசிகர்களை சோதித்தது. இந்த படம் வந்த போது மிகப்பெரும் அளவில் மண்ணைக் கவ்வியது. ஆனபோதும் இந்த படத்தின் பாடல்கள் தேன். சாக்ஸோபோன் வாசிக்கும் கலைஞராக பிரபு நடித்திருந்தார். கத்ரி கோபால்நாத் அவர்களைக்கொண்டு அருமையான இசையை வாசிக்க செய்தார் ரஹ்மான்.

யுவன் ஷங்கர் ராஜா – பையா: பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட யுவன், 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து தொடர்ந்து முன்னணியில் உள்ளார். அவர் இசை அமைத்த ரவுடி பேபி பாடல் உலகம் முழுவது பல கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டது என்பது மிகப்பெரிய சாதனை.
பையா படத்தை நாம் யுவனின் பெஸ்ட் என்று கூறலாம். அணைத்து பாடல்களும் பட்டையை கிளப்ப, படம் மாஸ் ஹிட் ஆனது. அனால் இந்த படத்தின் பாடல்களை எடுத்துவிட்டு பார்த்தால் சாதாரண தெலுங்கு படம் போல இருக்கும். அனைத்து பாடல்களும் ஹிட்டான இந்த படத்தில் கார்த்தி, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் – உன்னாலே உன்னாலே: அருமையான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ், பல திரைப்படங்களைக் காப்பாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர். அவர் முன்னணியில் இருந்த போது தொடர்ந்து பல படங்களுக்கு சிறப்பான இசையை வழங்கி வந்தார். அப்போது வெளிநாடுகளுக்கு பறந்து பறந்து இசை அமைத்துக்கொண்டு இருந்த நேரம் அது. உன்னாலே, உன்னாலே படத்தை அவரது பெஸ்ட் என்று சொல்லலாம். காரணம் இந்த படமே ஒரு மியூசிக்கல் ஹிட் தான். சாதாரண காதல் கதையாக வந்திருக்க வேண்டிய படம், பாடல்கள் உயர்த்தி விட்ட காரணத்தால், மாபெரும் ஹிட் ஆனது. பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் தான்.

ஜி.வி.பிரகாஷ் – ஆனந்த தாண்டவம்: ஜி.வி.பிரகாஷ் பல நல்ல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல படங்களில் போதும் போதும் என்று கெஞ்சும் அளவுக்கு நடித்தும் விட்டார். ஆனாலும் அவருக்குள் இருக்கும் அசாத்திய இசை அமைக்கும் திறமையை மறைக்க இயலாது.
ஆனந்த தாண்டவம் படத்தை இவரது பெஸ்ட் இன் ஒர்ஸ்ட் மூவி என்று சொல்லலாம். பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலை படமாக்கியத்தில் சொதப்பியதால் இந்த படம் பிளாப் ஆனது. என்றாலும் அந்த படத்தை கொஞ்சமேனும் ரசிக்க வைத்தது பாடல்கள் என்றால் அது மிகையல்ல

அனிருத் – வணக்கம் சென்னை: பல திரைப்படங்களுக்கு தொடர்ந்து சிறப்பான இசையை கொடுத்து காப்பாற்றி வரும் அனிருத் இன்று முன்னணியில் இருக்கும் இளம் இசை அமைப்பாளர். பெரும்பாலும் அவர் இசை அமைக்கும் படங்கள் பெரிய ஹிட் ஆகிவிடுகின்றன. இந்த பதிவில் அவரது மிகசுமாரான படத்தின் சூப்பர்ஹிட் ஆல்பமாக நாம் பார்ப்பது வணக்கம் சென்னை படத்தை. பாடல்களை நீக்கிவிட்டால் இன்னொரு சுமாரான படமாத்தான் இந்த படம் தோன்றும்.

சந்தோஷ் நாராயணன் – ஜிகர்தண்டா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா மிக மிக சுமாரான படம். அந்த படத்தை தாங்கி பிடித்தது சந்தோஷ் அவர்களின் பாடல் என்பதே உண்மை. அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு தான் அவர் ரஜினிகாந்த் படங்களுக்கு, விஜய் படங்களுக்கு இசை அமைக்கும் அளவிற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

மேலே உள்ள படங்கள், நிச்சயம் அந்த இசைக்கலைஞர்களின் சிறப்பான அல்லது பெஸ்ட் என்று கூற இயலாது. ஆனால் அந்த படங்களை அந்த இசை தாங்கி பிடித்தது அல்லது மாபெரும் வெற்றி பெற வைத்தது என்று கூறலாம்.

Trending News