திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கண்ணீர் வெள்ளத்தில் தமிழகம், ஸ்தம்பித்த கோயம்பேடு.. மதுரை மைந்தன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை

Vijayakanth: ஒரு மனிதனின் இறப்புக்காக ஒரு நாடு அழுதால் அவர்தான் ஒரு நல்ல தலைவன் அப்படி ஒரு சம்பவம் தான் இன்று நடந்திருக்கிறது. கருப்பு வைரமாய் மின்னிய கேப்டன் விஜயகாந்த் இன்று உயிர் நீத்துள்ளார். இந்த துயர செய்தியால் தற்போது தமிழகமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடே மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இப்படி தமிழக மக்களின் ஒட்டுமொத்த அன்பைப் பெற்றுள்ள கேப்டன் என்னும் மதுரை மைந்தனின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

இன்றைய தலைமுறைக்கு விஜயகாந்த் ஒரு பலவீனமான குழப்பமான மனிதராக மட்டுமே தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த மனிதர். அழகர்சாமி, ஆண்டாள் என்பவர்களுக்கு பிறந்த விஜயராஜ் சினிமா மீது கொண்ட ஆசையினால் சென்னைக்கு வந்தார்.

Also read: மூச்சை நிறுத்திய கலியுக கர்ணன் கேப்டன்.. இறுதி ஊர்வலம் அடக்கம் செய்யப் போவது இங்குதான்

விஜயகாந்த் என்ற பெயரோடு நமக்கு அறிமுகமான இவர் பின்னாளில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படம் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கிய விஜயகாந்த் விடாமுயற்சியோடு முன்னேறி ரஜினி, கமலுக்கு நிகரான அந்தஸ்தை பெற்றார்.

அனைவரும் சமம் என்ற கொள்கை கொண்ட இவர் படப்பிடிப்பு தளத்தில் தான் சாப்பிடும் உணவையே மற்றவர்களுக்கும் கொடுத்தார். அதேபோல் விஜய், சூர்யா, வடிவேலு என இவர் கை தூக்கி விட்ட நடிகர்களின் பட்டியலும் ஏராளம். ஒரே ஆண்டில் 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிசியான நடிகராகவும் இவர் இருந்தார்.

வைதேகி காத்திருந்தாள், வானத்தைப்போல, கேப்டன் பிரபாகரன், ரமணா என இவர் நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் இன்றும் நம் நினைவை விட்டு நீங்காதது. மேலும் 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற இவர் பிரபலங்களை வைத்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். அதன் மூலம் நடிகர் சங்க கடனையும் அடைத்தார்.

Also read: கேப்டன் துயில் கொள்ளப் போவது இங்குதான்.. விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எப்போது.? வெளியான அறிவிப்பு

இப்படி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் அரசியல் வரலாற்றையும் புரட்டிப் போட்டார். அதன்படி தேமுதிக கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் தேர்தலில் போட்டியிட்டு விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி கண்டார்.

அதில் 29 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்படி ஒரு அரசியல் சரித்திரத்தை உருவாக்கிய விஜயகாந்தின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமானது. அதை தொடர்ந்து அரசியலிலும் அவருக்கு சரிவுகள் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் உடல் நலக்குறைவால் வீட்டுக்குள்ளேயே இருந்த விஜயகாந்த் தற்போது நம்மை விட்டு விண்ணுலகம் சென்றுள்ளார். இது சினிமா துறைக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கிறது.

- Advertisement -

Trending News