இன்று பல த்ரில்லர் படங்கள் வந்தாலும் தொழில்நுட்பங்கள் பெரிதும் இல்லாத காலத்திலேயே அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு த்ரில்லர் படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் தமிழில் மிகப் பெரிய ஹிட் அடித்த படங்கள் நிறைய உண்டு.
அந்த நாள்:
இப்படத்தில் சிவாஜி கணேசனின் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.
நெஞ்சம் மறப்பதில்லை:
நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா. மேலும் இந்த படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.
புதிய பறவை:
1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவாஜியின் நடிப்பும் பாடலும் மிரள வைத்தது. அற்புதமான த்ரில்லர் படம்.
சாந்தி நிலையம்:
1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சிகப்பு ரோஜாக்கள்:
(1978) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் திரில்லர் அம்சம் கொண்ட திரைக் கதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றிபெற்ற படம்.
மூடுபனி:
1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நூறாவது நாள்:
1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது. சத்யராஜின் வில்லத்தனம் இந்த படத்திற்கு பெரும் தூணாக அமைந்தது.