திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு மரியாதை அவ்வளவுதான்.. வாரிசு ரிலீஸ் குறித்து வெளுத்து வாங்கிய பிரபலம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் சமீப காலமாக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. வரும் பொங்கலுக்கு இப்படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த வேளையில் துணிவு திரைப்படம் போட்டிக்கு களமிறங்கியுள்ளது. இதுவே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகில் இப்படம் வெளியாவதற்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு என்பதால் ஒவ்வொரு பிரச்சனையையும் அவர் சரி செய்து வருகிறார். இந்நிலையில் முன்னணி நடிகர்களை பற்றி விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தயாரிப்பாளர் கே ராஜன் வாரிசு படத்தின் ரிலீஸ் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Also read: இப்ப வாங்க ஒரு கை பார்க்கலாம், நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய்.. உச்சகட்ட பயத்தில் துணிவு

அவர் கூறியிருப்பதாவது, விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும்தான் மரியாதை இருக்கிறது. எதற்காக அவர் தேவையில்லாமல் தெலுங்கு நடிகர்களுடன் போட்டி போட வேண்டும். இதன் மூலம் அவர் தன்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்கிறார். தெலுங்கு ஹீரோக்கள் அங்கிருக்கும் தயாரிப்பாளர்களை நல்ல முறையில் தான் கவனித்துக் கொள்கிறார்கள். அதேபோன்று தமிழ் தயாரிப்பாளர்களிடம் நீங்கள் நடந்து கொள்கிறீர்களா, தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தாமல் ஆந்திராவில் சென்று நடத்துகிறீர்கள்.

இதனால் இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கும் மேலாக இப்போது நேரடி தெலுங்கு படங்களுக்கு போட்டியாக உங்கள் படங்களையும் இறக்கி அவர்கள் பணத்திலும் பங்கு போட பார்க்கிறீர்கள் என்று கோபமாக பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் 25 சதவீதம் தான் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

Also read: விஜய் அப்பாவை பிரிய இவர்தான் முக்கிய காரணம்.. கண்மூடித்தனமாக நம்பியதால் காத்திருக்கும் ஆப்பு

அதனால் அங்கு பிரச்சனை செய்யாமல் தமிழ்நாட்டில் வசூலை எப்படி அதிகப்படுத்துவது என்பதை மட்டும் கவனியுங்கள். ஏனென்றால் தமிழ்நாட்டில் விஜய், அஜித் இருவருக்குமே சமமான இடம் இருக்கிறது. அவர்கள் இருவரையும் இங்கு யாரும் அசைக்க முடியாது. அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் தெலுங்கு ஹீரோக்களுடன் போட்டி போட வேண்டும் என்று வாரிசு ரிலீஸ் குறித்து நன்றாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.

மேலும் அங்கு உங்கள் படங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழ் திரையுலகம் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருக்கும் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் தற்போது ஆவேசத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also read: தளபதி 67 மொத்த கதை இதுதான்.. லோகேஷ் LCU-வில் ரோலக்ஸ் என்கிற ஒத்த தலையை எடுக்க பத்து தல அவதாரம்

Trending News