பாலிவுட் திரையுலகில் இன்று முன்னணி நடிகையாக பல சவாலான கேரக்டர்களை ஏற்று நடித்து பிரபலமாக இருப்பவர் அந்த நடிகை. இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைக்கு ஆரம்ப காலத்தில் கிடைத்தது என்னவோ பல அவமானங்களும், சோதனைகளும் தான்.
தமிழ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த நடிகை முதலில் நடிக்க வந்தது தமிழ் சினிமாவுக்கு தான். இங்கே சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நடிகையை சில தயாரிப்பாளர்கள் அழகில்லை என்று பல மோசமான வார்த்தைகளை கூறி மட்டம் தட்டி அசிங்கப்படுத்தி உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகை நடிக்க இருந்த பல திரைப்படங்களில் இருந்தும் அவரை நீக்கிவிட்டு வேறு நடிகையை புக் செய்தார்களாம். அப்படி இவருக்கு பதிலாக நடிக்க வந்த அந்த நடிகை இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.
ஆனாலும் மனம் தளராத நடிகை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் பாதியிலேயே நின்று போனது. இதனால் விரக்தி அடைந்த நடிகைக்கு தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்ப்பதற்கே பயமாக இருக்குமாம்.
தான் அழகில்லை என்று மனதளவில் சோர்ந்து போன நடிகைக்கு பாலிவுட்டில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு நடிக்க ஆரம்பித்த நடிகை இன்று பாலிவுட்டில் அசைக்கமுடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார். பலரும் நடிக்க தயங்கும் கேரக்டரை நடிகை அசால்ட்டாக நடித்து விடுவார்.
இதனால் அவரின் புகழ் இந்திய அளவில் பரவ ஆரம்பித்தது. இதை கண்டு கொண்ட தமிழ் தயாரிப்பாளர்கள் மீண்டும் நடிகையை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகினார்கள். ஆனால் தன்னை அவமானப்படுத்திய தமிழ் திரையுலகில் இனி நடிக்கக்கூடாது என்று நடிகை தீவிரமாக இருந்தார்.
ஆதலால் எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் நடிகை நடிக்க முடியாது என்று மறுத்து வந்தார். இந்தக் கொள்கையை அவர் ஒரு பிரபல நடிகருக்காக தளர்த்திக் கொண்டார். சில வருடங்களுக்கு முன் நடிகை பிரபல முன்னணி தமிழ் நடிகருக்கு ஜோடியாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் இது கூட தயாரிப்பாளர் பாலிவுட்டை சேர்ந்தவர் என்பதால் தான். அதன்பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிகை தற்போது வரை அந்த வாய்ப்புகளை ஏற்காமல் நிராகரித்து வருகிறார்.