தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலை விரித்து விஜய்யை அசிங்கப்படுத்திய படக்குழு.. அப்படி என்னதான் கோவமோ!

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ். சினிமாவை ஆட்டிப் படைக்கும் தமிழ் ராக்கர்ஸ் என்ற பெரிய பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் அருண் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது.

ஆனால் தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாகக் கூறும் விஜய்யின் குடும்பத்தை அவமானப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது தந்தையால் பெரிய ஆளான ஒரு ஹீரோ. அதாவது ஆக்ஷன் ஸ்டார் ஆதித்யா என்ற நடிகர் கருடா படத்தில் நடித்துள்ளார்.

Also Read : அம்மாவைப் போல் அச்சு அசலாக அருண் விஜய் மகள்.. கண்டிப்பா நாலு வருஷத்துல ஹீரோயின்தான்

இப்படம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த நடிகரின் ரசிகர்கள் எப்படியும் படத்தை வெற்றியடையச் செய்து விடுவார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெத்த லாபம் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

ஆனால் நாளை படம் ரிலீசாகிறது என்றால் அதற்கு முதல் நாள் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ரிலீஸ் செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். அதை அருண் விஜய் எப்படி துப்பறிந்து தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

Also Read : விலகி ஓடிய அருண் விஜய்.. வெங்கட் பிரபுவை 4 திசையிலும் ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற ஆக்சன் ஸ்டார் ஆதித்யா கதாபாத்திரம் தளபதி விஜய்யை சித்தரித்த எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனரான தந்தையால் ஹீரோவாக ஜொலித்தவர் நடிகர் விஜய். அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன், விஜய் கூட்டணியில் உருவாக இருந்த படத்தின் தலைப்பு கருடா.

அதைக் குறிக்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் படத்தில் அந்தப் பெரிய ஹீரோ நடித்திருக்கும் படத்தின் பெயர் கருடா என இடம்பெற்றிருந்தது. இவ்வாறு விஜய் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலைத் விரிப்பதாக கூறி விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏசியை படக்குழு அவமானப்படுத்தி உள்ளனர். அந்த அளவுக்கு விஜய் மீது படக்குழுவுக்கு என்னதான் கோவமோ.

Also Read : விஜய் முன்னிலையில் 2வது திருமணம்.. உண்மை காரணத்தை போட்டு உடைத்த எஸ்ஏசி