வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தமிழ் டாப் ஹீரோக்கள் இவங்கள்ட்ட கத்துக்கணும்.. கம்மி பட்ஜெட், தரமான படங்களை கொடுத்த 5 சூப்பர் ஸ்டார்ஸ்

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக கருதப்படும் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்டோர் ஒவ்வொரு படத்துக்கும் தற்போது 100 கோடிக்கு மேல் சம்பளத்தை வாங்கிதான் ஹிட் கொடுக்கின்றனர். ஆனால் இந்த 6 மலையாள சூப்பர் ஸ்டார்ஸ் சில கோடிகளை மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டு தரமான படங்களை கொடுத்து ஹிட் கொடுக்கின்றனர். இதனால் அவர்களது படத்தின் பட்ஜெட்டும் எகிறாமல் கம்மி பட்ஜெட்டிலேயே படத்தை முடிக்க முடிகிறது.

பிருத்விராஜ்: தன்னுடைய 19 வயதிலேயே நந்தனம் என்ற மலையாள படத்தில் அறிமுகமான, இவர் அதைத்தொடர்ந்து 60-கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் 2007 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பெரும்பாலும் கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து ஹிட் கொடுத்தாலும் இவருடைய ஒரு படத்தில் சம்பளம் 6 கோடி தான்.

Also Read: கேஜிஎப் இயக்குனர் வெளியிட்ட புதிய போஸ்டர்.. கொலவெறியில் இருக்கும் பிரித்திவிராஜ்

துல்கர் சல்மான்: மம்முட்டியின் மகனான இவர் வாரிசு நடிகராக சினிமாவில் எளிதாக நுழைந்தாலும், திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் விட்டு வைப்பார்கள். அந்தவகையில் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’  என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர், தமிழில் வாயை மூடி பேசவும் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இவர் ஒரு படத்திற்காக 5 கோடி சம்பளமாக பெறுகிறார்.

பஹத் பாசில்: நஸ்ரியாவின் கணவராக தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான பஹத் பாசில், 2002ஆம் ஆண்டு அவருடைய தந்தை இயக்கிய ‘கையெத்தும் தூரத்து’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு 2011ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்ற பெருமைக்குரியவர். இவர் மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்ததுடன் தமிழிலும் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் அட்டகாசமான நடித்து வெளிக்காட்டினார். இவர் ஒரு படத்திற்காக 4 கோடியை மட்டுமே சம்பளமாக கேட்கிறார்.

Also Read: கமலஹாசனை மிரட்டிய பகத் பாசில்..

நிவின் பாலி: 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட நிவின்பாலி, நேரம் படத்தில் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு இவர் பல ஹிட் படங்களை கொடுத்தாலும் அவருடைய சம்பளத்தை உயர்த்தாமல் இப்பொழுதும் ஒரு படத்திற்காக 3 கோடியை மட்டுமே பெறுகிறார்.

குஞ்சக்கோ போபன்: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், சில படங்களை தயாரித்தும் வருகிறார். 90 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தரமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். இருப்பினும் இவர் ஒரு படத்திற்காக ஒன்றரை கோடி மட்டுமே சம்பளம் கேட்கிறார்.

Also Read: தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து ஆடிய 6 மலையாள படங்கள்.. பிரேமம் மலர் டீச்சர மறக்க முடியுமா!

டோவினோ தோமஸ்: கேரளாவை சேர்ந்த மிகவும் விரும்பத்தக்க மனிதர்களின் பட்டியலில் இவருக்கு 6-வது இடம் கிடைத்திருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டோவினோ தோமஸ், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘பிரபுவிந்தே மக்கால்’ மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பிறகு நல்ல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை குத்த பிறகும் இவருடைய சம்பளத்தை உயர்த்தாமல் இப்பொழுதும் 1 கோடி மட்டுமே ஒரு படத்திற்காக வருகிறார்.

இவ்வாறு இந்த 6 நடிகர்களும் மிகக் குறைந்த சம்பளத்தில் தரமான படங்களை கம்மி பட்ஜெட்டில் கொடுக்கின்றனர். இவர்களை வைத்து பார்க்கும்போது கோலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி படத்தின் பட்ஜெட்டையும் அதிகரித்து விடுவார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என்பதும் தெரிகிறது. ஆகையால் தமிழ் நடிகர்கள் மலையாள நடிகர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களது சம்பள விவரத்தை பார்த்ததும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் செய்கின்றனர்.

Trending News