Mudhalvar Marundhagam: உணவு உடை இருப்பிடம் என்பதை தாண்டி இப்போதைய மக்களுக்கு மருந்துகள் அத்யாவசிய தேவையாக இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி மக்கள் மருந்தகத்தை தொடங்கி வைத்தார்.
இதில் தனியார் மருந்தகங்களை விட குறைவான விலையில் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு போட்டியாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்களை இன்று திறந்து வைத்துள்ளார்.
இது முதற்கட்டம் தான் போகப் போக இன்னும் அதிகரிக்கப்படும். அதன் படி சென்னை, கோவை, மதுரை, அரியலூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
பிரதமருக்கு போட்டியாக இறங்கிய முதல்வர் மருந்தகம்
இங்கு நாம் 75% குறைந்த தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும். அதன்படி நீரிழிவு நோய்க்கான மெட்ஃபார்மின் என்ற மருந்து 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஆனால் இதே மருந்தை முதல்வர் மருந்தகத்தில் 11 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும். ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மாதம் தோறும் 3000 முதல் பல ஆயிரங்களை மக்கள் செலவு செய்கின்றனர்.
இனி அது தேவையில்லை முதல்வர் மருந்தகத்தில் ஆயிரம் ரூபாய்க்குள் இந்த மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். இது போல் பல பிரச்சினைகளுக்கான மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மருந்துகள் ஸ்டாக் இல்லை என்றால் 48 மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்துவிடும். இதனால் மக்கள் பலவிதங்களில் பயன் பெறலாம்.
இதன் மூலம் பி ஃபார்ம், டி ஃபார்ம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த தகவலை மருத்துவரும் திமுக எம்எல்ஏவும் ஆன எழிலன் தெரிவித்துள்ளார்.