APPA செயலியை தொடங்கி வைத்த முதல்வர்.. அப்படின்னா என்ன.? முழு விவரம்

appa-stalin
appa-stalin

APPA: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அப்பா என்ற புது செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அது குறித்து இங்கு காண்போம்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடலூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழா இன்று நடைபெற்றது.

அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கல்வித்துறையில் தமிழக அரசு செய்வது எல்லாமே சாதனை தான்.

APPA செயலியை தொடங்கி வைத்த முதல்வர்

ஒவ்வொரு மாணவரும் நம் தமிழ்நாட்டின் சொத்து. பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் கடமை தமிழக அரசுக்கும் இருக்கிறது.

அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை. எந்த மொழிக்கும் நாம் எதிரி கிடையாது. ஆனால் அதை திணிக்க கூடாது என ஹிந்தி திணிப்பு பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு புது செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். இந்த அப்பா செயலி தமிழக பெற்றோர், ஆசிரியர் கழக செயல்பாடுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Anaithu Palli Parents teachers Association என்பதன் சுருக்கம் தான் இந்த APPA. இந்த செயலியில் நாம் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

Advertisement Amazon Prime Banner