திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜயகாந்த் குடும்பம் வைத்த கோரிக்கை.. ஒரே நாளில் செயல்படுத்தி காட்டிய முதல்வர் ஸ்டாலின்

Tamilnadu CM announced Captain Vijayakanth Square to chennai koyambedu bend junction: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும், தேமுதிக கட்சியின் நிர்வாகியான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28 2023 இல் காலமானார். பொதுமக்கள், நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சுப்ரமணியன் போன்றோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து  விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மக்களுக்காக, மக்களின் பசிபிணி  தீர்த்த விஜயகாந்திற்கு கழக தலைமை அலுவலகத்திலேயே மிகப்பெரிய சமாதி அமைக்க இருப்பதாக கூறினார்.

Also read: விஜயகாந்த் நம்பி வளர்த்தவைகள் & வளர்த்தவர்கள்.. இதனால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருந்த கேப்டன்..!

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரேமலதா அவர்கள், பல்வேறு நலப்பணிகள் செய்து   மக்களுக்காக வாழ்ந்த விஜயகாந்திற்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.  இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்பாரா என்பது கேள்விக்குறியே!

முதல்வர் அவர்கள் கேப்டன் விஜயகாந்த் மேற்கொண்ட நற்செயல்களை கௌரவிக்கும் பொருட்டு  சென்னையின் பிரதான சாலையாக விளங்கும் கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு கேப்டனை இழந்த குடும்பத்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வரவேற்ற தேமுதிக கட்சி நிர்வாகத்தினர் முதல்வரின் செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Also read: ஒரே ஒரு படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜயகாந்த்.. நண்பனுக்காக சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த கேப்டன்

Trending News