Memes: இந்த வருடம் சம்மர் விடுமுறை உக் கிரமாக ஆரம்பித்தது. ஆனால் இப்போது ஊரே குழுமையாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது.
ஆனால் திடீரென வருண பகவான் உள்ளே வந்து வெப்பத்தை குறைத்து விட்டார். கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் வெயிலின் தாக்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
இது இப்போது பள்ளி மாணவர்களுக்கு சோகத்தை கொடுத்து விட்டது. ஏனென்றால் வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஜூன் 10ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது மழை வந்ததால் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன் அறிவிப்பு வந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு போகணுமா என மாணவர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
ஆனால் பெற்றவர்களோ அப்பாடா ஒரு வழியா ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு என சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதன் மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.
சமூக ஊடகங்களில் பிரபலமான மீம்ஸ்கள்
- பகல் ஃபுல்லா வெயில் அடிக்குது நைட்ல மழை பெய்யுது
- பிரமோஷனை அவரே பாத்துக்குவாரு, ட்ரெண்டிங் மீம்ஸ்
- வெற்றி கோப்பையை நழுவ விட்ட SRH மீம்ஸ்