புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

400 கிலோ மீட்டர் மைலேஜ், டாடாவின் புதிய கார் அறிமுகம்.. மரண பீதியில் முன்னணி நிறுவனங்கள், எவ்வளவு தெரியுமா?

TATA Nano Electric car: இப்ப இருக்கிற விலைவாசியில ஒரு லட்ச ரூபா இருந்தால் தான் பைக்/ ஸ்கூட்டர் வாங்க முடியும் என்று ஒரு நிலைமை வந்துவிட்டது. ஆனால் இந்த விலைக்கு கார் கிடைக்கும் என்று முதன் முதலாக குறைந்த காரை இந்தியாவில் பிரபலமாகியது நானோ கார் தான். 1 லட்சம் என்று சொல்லப்பட்டாலும், இதன் ஆன்ரோடு விலை சுமார் 1.4 லட்சம் வந்தது. பார்ப்பதற்கு ஆட்டோ மாதிரி இருக்கே என்று சிலர் சொல்லிய நிலையில, 1.25 லட்சத்துக்கு இந்த கார் செம ஒர்த் என்று நானோவைச் சிலர் பாராட்டினார்கள்.

ஆனாலும் 2020ல் நானோவின் விற்பனை பெருசாக சொல்லும்படி இல்லாததால் நானோவின் உற்பத்தியை நிறுத்திவிட்டது டாடா மோட்டார்ஸ். இப்போது சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த நானோ கார் திரும்பவும் எலெக்ட்ரிக் மூலமாக வந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது வந்திருக்கும் டாட்டா நானோ EV எந்த அளவுக்கு மைலேஜ் கொடுக்கிறது. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

பல ஆண்டுகளுக்கு பின் வந்திருக்கும் டாடா நானோ கார்

சில வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த நானோ கார் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதால் டாடா நிறுவனம் நானோ மின்சார வாகன காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் பல நவீன அம்சங்களை வைத்திருக்கிறார்கள். மைலேஜ் பொருத்தவரை இந்த காரில் 350 முதல் 400 கிலோமீட்டர் வரை கிடைக்கிறது என்று வாகனத்துறையை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக இயங்கக் கூடியதாகவும், இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஸ்டியரிங் மவுண்ட் கண்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற பல வசதிகளும் இருக்கிறது. அது மட்டுமல்ல இந்த நானோ எலக்ட்ரிக் கார் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களும் வாங்கும் அளவிற்கு பட்ஜெட் ரீதியாகவும் குறைந்து நவீன அம்சங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் 7 இலட்சம் இருந்தால் போதும் இந்த கார் உங்களுக்கு சொந்தமாக வாங்கிட முடியும்.

- Advertisement -spot_img

Trending News