மீனாவை பழிவாங்க சக்திவேலுடன் சதி செய்த குமரவேலு.. காப்பாற்ற போகும் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியை கல்யாணம் பண்ணுவதற்கு மீனா மற்றும் பாண்டியன் ரொம்பவே இடைஞ்சலாக இருக்கிறார் என்று சக்திவேல் குமரவேலுவிடம் சொல்கிறார். முக்கியமாக வீட்டில் இருக்கும் சொத்துக்கள் எல்லாத்தையும் ஒவ்வொன்றாக காலி பண்ணும் விதமாக மீனா அரசாங்க உத்தியோகத்தை கையில் வைத்துக்கொண்டு அதிகாரம் பண்ணி வருகிறார்.

இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் மீனா அவமானப்பட்டு வேலை இல்லாமல் திண்டாட வேண்டும். அதற்கு நாம் களத்தில் இறங்கினால் தான் நமக்கு சாதகமாக முடியும் என்று குமரவேலுவிடம் சக்திவேல் சொல்கிறார். குமரவேலுவும் தன்னை அடித்த மீனாவை நினைத்து பார்த்து கடுப்பில் சரி என்று சொல்லி கூட்டணி போட்டுவிட்டார்.

அந்த வகையில் சக்திவேல் பணம் கொடுத்து சில ஆட்களை ரெடி பண்ணி மீனாவிடம் லஞ்சம் கொடுப்பது போல் தயார் படுத்தி விட்டார். மீனா ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த நபர் மீனாவிடம் நைசாக பேசி பணத்தை கையில் கொடுத்து விட்டார். அதை வாங்கும்பொழுது லஞ்சம் ஊழல் துறை ஆபீஸ்ல இருந்து வந்து மீனா லஞ்சம் வாங்கியதாக நினைத்து விசாரணை பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

பிறகு அங்கு இருந்த சக்திவேல் மற்றும் குமரவேலு, மீனா மீது பொய்யான விஷயங்களை சொல்லி தொடர்ந்து லஞ்சம் கேட்டு டார்ச்சர் பண்ணுவதாக சொல்லிவிடுகிறார்கள். இதனால் அங்கு வந்த அதிகாரிகளும் அதை நம்பிக் கொண்டு மீனாவை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கூடவே சக்திவேல் பத்திரிகையாளர்களையும் கூட்டிட்டு வந்து மீனா அவமானப்படுவதை போட்டோ எடுத்து பத்திரிகையில் போட சொல்லி விட்டார்.

இதை வீட்டிலிருந்து பார்த்த தங்கமயில் மற்றும் கோமதி அதிர்ச்சியாகி விட்டார்கள். அதாவது சக்திவேல் பிளான் என்னவென்றால் மீனா ஒரு பக்கம் அவமானப்பட்டு ஜெயிலில் இருந்தால் அவரைக் காப்பாற்றும் விதமாக மொத்த குடும்பமும் அதை யோசித்து கொண்டு இருப்பார்கள். அந்த சமயம் நீ உள்ளே புகுந்து அரசியை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி விடு.

கழுத்தில் தாலி கட்டி விட்டால் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்பது போல் சக்திவேல், குமரவேலுவிடம் சொல்லிவிடுகிறார். இதனால் குமரவேலுவும் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லி இந்த மாதிரியான வேலைகளை செய்ய துணிந்து விட்டார்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் சக்திவேல் தான் என்று மீனா, குடும்பத்தில் இருப்பவரிடம் சொல்லிய நிலையில் மீனாவை காப்பாற்றும் பொறுப்பில் எல்லோரும் மும்மரமாக களத்தில் இறங்கப் போகிறார்கள். அதே நேரத்தில் மீனா மீது எந்த தவறும் இருக்காது என்று என்னும் ராஜி ஆதாரங்களை திரட்டி சக்திவேல் மீது தவறு இருப்பதை நிரூபித்து காட்டி மீனாவை காப்பாற்றி விடுவார்.