ஓவர் பந்தா, இழுத்தடிக்கும் கொம்பையா பாண்டியன்.. குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சன் டிவி பேரம் பேசிய அடுத்த 2 நடிகர்கள்

Ethir Neechal, Gunasekran: சமீபத்தில் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். இந்த தொடரை தூக்கி நிறுத்தியது அவருடைய கதாபாத்திரம் என்பதால் அடுத்ததாக குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் பொருந்துவார் என்று பேச்சுவார்த்தை நடந்தது.

அதன்படி கிடாரி படத்தில் கொம்பையா பாண்டியனாக அசத்திய வேல ராமமூர்த்தி பார்ப்பதற்கு மாரிமுத்து சாயலில் இருக்கக்கூடியவர். அவருடைய தோரணை, குரல் வளம், மிடுக்கு என அனைத்தும் மாரிமுத்து உடன் ஒன்றிப்போய் உள்ளது. இதனால் தான் மாரிமுத்து மற்றும் வேலராமமூர்த்தி இருவரும் சகோதரர்களாக கூட ஒரு படத்தில் நடித்துள்ளார்களாம்.

சன் தொலைக்காட்சி வேல ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசி உள்ளது. ஆனால் சீரியலில் நடித்த அனுபவம் தனக்கு இல்லை என்பதாலும், ஏற்கனவே பல படங்களில் ஒப்பந்தமாகி கால்ஷீட் கொடுத்ததால் அதிலிருந்து விலக முடியாது என பேசி உள்ளார். மேலும் வெளிநாட்டில் ஷூட்டிங் இருக்கிறது என இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மாரிமுத்து நடித்த காட்சிகள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளதால் உடனடியாக அடித்த குணசேகரனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சன் தொலைக்காட்சி இருக்கிறது. அதன்படி இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அடுத்த இரண்டு நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அதன்படி வில்லன் நடிகராக மிகவும் பரிச்சயமான ராதாரவி இடம் பேசி வருகிறார்களாம். மாரிமுத்துவை விட இவருக்கு சற்று வயது அதிகமாக தெரிந்தாலும் இந்த கதாபாத்திரத்திற்கு ஓரளவு பொருந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதாரவி செல்லமே போன்ற ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் நடிகர் பசுபதி இடமும் தொலைக்காட்சி பேசி இருக்கிறதாம். இவ்வாறு அடுத்த குணசேகரன் கதாபாத்திரத்திற்காக வேல ராமமூர்த்தி, ராதாரவி, பசுபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் யார் நடிக்க இருக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.