கடந்த வாரம் விஜய் டிவியில் 20 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இருக்கும் 20 போட்டியாளர்களும் நான்கு பிரிவுகளாக பிரித்து வீட்டில் இருக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. குழந்தைத்தனமான அவருடைய பேச்சும், நடவடிக்கையும் அவருக்கென தனி ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை உருவாக்கியது.
இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக வைத்திருக்கும் இவருடைய யதார்த்தமான பேச்சு சிலருக்கு பிடிக்காமல் போனதால் அவர்கள் ஜிபி முத்துவை அழ வைத்து விட்டனர்.
முதலில் ஜிபி முத்து உடன் நெருங்கிப் பழகிய போட்டியாளர்களாக தனலட்சுமி மற்றும் ஆயிஷா இருவரும் அவர் எதார்த்தமாக பேசியதை வைத்து அவரது மனதை காயப்படுத்தினார்கள். இதனால் எப்போதுமே நிகழ்ச்சியில் கலகலப்பாக இருக்கும் ஜிபி முத்து டைனிங் டேபிளில் தனியாக அமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.
இதைப் பார்த்த சக போட்டியாளர்களான ரக்ஷிதா உள்ளிட்டோர் ஜிபி முத்துவை ஆறுதல் படுத்தினார்கள். இருப்பினும் ஜிபி முத்துக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி புதிது என்பதால், எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எல்லோரிடமும் எதார்த்தமாக பழக கூடாது என்பதை நாள்தோறும் சக போட்டியாளர்கள் காட்டிக் கொண்டிருப்பதால் அதை நினைத்து மனம் கலங்குகிறார்.
எனவே ஜிபி முத்துவுக்கு தனி ரசிகர் கூட்டம் இருப்பதால், அவரை காயப்படுத்திய அந்த இரண்டு போட்டியாளர்கள் தான் இந்த வாரம் நிச்சயம் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்று ரசிகர்களிடம் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேற தயாராகி விட்டனர்.