சன் டிவியில் அடுத்தடுத்து வரிசை கட்டி இருக்கும் 3 புது சீரியல்கள்.. ஜெட் வேகத்தில் பறக்க போகும் டிஆர்பி ரேட்டிங்

Sun Tv New Serial: என்னதான் புது புது படங்கள் அதிகமாக வந்தாலும் தினசரி வீட்டில் இருந்தபடியே அதிக நேரத்தை செலவிடுவது சின்னத்திரையில் மூலம் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். அதிலும் இல்லத்தரசிகளின் மனதை கவரும் வகையில் சீரியல்கள் மக்கள் மனதில் ஒய்யாரமாக இடம் பிடித்து விட்டது. அந்த வகையில் சீரியல்களை போட்டி போட்டுக் கொண்டு நிறைய சேனல்கள் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இருந்தாலும் இதில் சிம்மாசனத்தில் இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான். அதற்கு முக்கிய காரணம் அடுத்தடுத்து புது சீரியல்களை கொண்டு வந்து மக்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகமான இடத்தை சன் டிவி சேனல் தான் பிடித்திருக்கிறது. ஆனாலும் அடுத்தடுத்து மூன்று புது சீரியல்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த சில மாதமாக ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் 2 இந்த மாத இறுதியில் வர போகிறது. ஆனால் இந்த முறை குணசேகரனை ஓட ஓட விரட்டும் அளவிற்கு நான்கு மருமகளும் வாடி வாசலை தாண்டி திமிரும் காளையாக அவருடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்பதற்கு ஏற்ப எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தின் மூலம் மக்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கனவை நிறைவேற்ற போகிறார்கள்.

அதே மாதிரி 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஆரம்பித்து கிட்டத்தட்ட 1300 எபிசோடு மேல் வெற்றிகரமாக வந்த ரோஜா சீரியலும் தற்போது இரண்டாம் பாகத்திற்கு தயாராகி விட்டது. ஆனால் இதில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்காரி கமிட்டாகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் நடிக்கப் போவதில்லை. இவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் தான் வரப்போகிறார்.

அடுத்ததாக அன்பே வா சீரியலில் மூலம் அறிமுகமான டெலினா டேவிஸ் இரண்டாவது சீரியலாக நடிக்க போகும் ஆடுகளம் என்ற புது சீரியலும் வரப்போகிறது. இப்படி இந்த மூன்று சீரியல்களும் அடுத்தடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகுதால் இனி டிஆர்பி ரேட்டிங் ஜெட் வேகத்தில் பறக்க போகிறது. அந்த வகையில் இனி சன் டிவி சேனலுடன் போட்டி போடுவதற்கு மற்ற சேனல்கள் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.

Leave a Comment