சன் டிவியில் அடுத்தடுத்து வரப்போகும் 3 புது சீரியல்கள்.. தோழியை கையோடு கூட்டிட்டு வந்த கயல்

Sun Tv serial: சின்னத்திரை பொருத்தவரை சீரியல்கள் தான் மக்களின் பொழுதுபோக்காக இருக்கிறது. இதில் ராஜாவாக ஜொலிப்பது சன் டிவி சேனல் தான். ஏனென்றால் இதில் உள்ள சீரியல்கள் தான் மக்களை அதிக அளவில் கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் இன்னும் புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வந்து மக்களை வேறு எந்த சேனல் பக்கமும் திரும்பவிடாமல் பார்த்து வருகிறது.

அந்த வகையில் இப்பொழுது முடிவுக்கு வரப்போகும் புன்னகைப் பூவே மற்றும் லட்சுமி சீரியல்களுக்கு பதிலாக அடுத்தடுத்து மூன்று சீரியல்கள் வரப்போகிறது. ஆனால் இந்த சீரியல்கள் இரண்டுமே மதியத்தில் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு பதிலாக ஏற்கனவே வருகின்ற சீரியலை மாற்றி விட்டு அதற்கு பதிலாக புத்தம் புதுசாக வரும் சீரியலை பிரைம் டைமிங்கில் ஒளிபரப்பு செய்ய போகிறார்கள்.

அப்படி எந்த சீரியல் வரப்போகிறது என்றால் முதலில் வருவது வினோதினி சீரியல். இந்த சீரியலை அப்துல்லா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இதில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்த ஆர்த்திகா மற்றும் சன் டிவி சீரியலில் கதாநாயகன் கிருஷ்ணா கமிட் ஆகியிருக்கிறார்.

இந்த சீரியலை தொடர்ந்து விஷன் டைம் தமிழ் தயாரிக்கப் போகும் பராசக்தி சீரியல் வரப்போகிறது. இதில் பவன் ரவீந்திரா மற்றும் தேப்ஜானி மோடக் கமிட் ஆகி நடித்து வருகிறார்கள். இந்த ஹீரோ ஏற்கனவே மிஸ்டர் மனைவி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். கதாநாயகி தேப்ஜானி ஏற்கனவே வானத்தைப்போல சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர்கள் இரண்டு பேருமே மறுபடியும் பராசக்தி என்ற புது சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார்கள். அடுத்ததாக தங்க மீன்கள் என்ற சீரியல் வரப்போகிறது. இதில் ரேஷ்மா கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் சன் டிவி சீரியலுக்கு முதல் முறையாக வருகிறார். கயல் சீரியலில் கயல் கேரக்டரில் நடித்து வரும் சைத்ரா இவருடைய நெருங்கிய தோழி என்பதால் இவர் மூலமாக சன் டிவிக்கு ரேஷ்மா வருகிறார். இவருக்கு ஜோடியாக சுந்தரி சீரியலில் நடித்த ஹீரோ ஜிஷ்ணு மேனன் கமிட்டாகி இருக்கிறார்.

இந்த சீரியலும் கூடிய விரைவில் வரப்போகிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் முதலில் இந்த மூன்று சீரியல்கள் தான் சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.