சொந்தமா உழைச்சு திங்கிற திராணி எனக்கு இருக்கு.. குணசேகரனின் 40% சேரில் இடியை இறக்கிய ரத்த சொந்தம்

Ethir Neechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் ஆதிரை கல்யாணத்திற்கு பிறகு ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர். இதனால் கடந்த வாரம் சன் டிவியின் டிஆர்பியும் சரிவை சந்தித்தது. ஆனால் எதிர்நீச்சலால் மட்டும் தான் மீண்டும் தூக்கி நிறுத்த முடியும் என்பதால் சுவாரஸ்யமான கதை களத்தை மீண்டும் கொண்டு வந்து உள்ளனர்.

அதாவது ஆதிரையின் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜனனி மற்றும் சக்தி இருவரும் குணசேகரன் வீட்டை விட்டு வெளியே உள்ளனர். நிற்கதியாக ரோட்டில் நிற்கும் அவர்களை ஜனனியின் தோழி சந்திக்கிறார். மேலும் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அவர்களை அழைத்துச் செல்கிறார்.

மறுபுறம் குணசேகரன் மற்ற மூன்று மருமகள்களையும் வீட்டில் அனுமதிக்க காரணம் ஒரு பக்கா பிளான் போட்டிருக்கிறாராம். குணசேகரன் பேச்சுக்கு இணங்க கதிரும் இதற்கு சம்மதித்துள்ளார். இந்நிலையில் ஜான்சி ராணி வீட்டில் முரண்டு பிடிக்கிறார் ஆதிரை. ஜான்சிராணி அவரை அதட்டி உருட்டுகிறார்.

ஆனால் பாதியில் விட்டுச் சென்ற அருணை விட கரிகாலன் ஆதிரைக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும் அந்த சமயத்தில் ஆதிரை அங்கு என்ன கஷ்டப்படுகிறாளோ என்று நந்தினி போன் செய்கிறார். ஆனால் ஆதிரை குணசேகரன் தங்கச்சி ஆச்சே, கோபத்தில் போனை விட்டிருக்கிறார்.

இந்நிலையில் 40% சேருக்காக சக்தி மற்றும் ஜனனியை வீட்டுக்கு வர வைக்கிறார் குணசேகரன்.மேலும் சொத்தை பிரித்து கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார். ஆனால் சக்தி ஒரே போடாக போட்டு விட்டார். அதாவது சொந்தமா உழைச்சு திங்கிற திராணி எனக்கு இருக்கு, உங்க சொத்து எல்லாம் வேண்டாம் என்று முகத்தில் அடிக்கும் விதமாக பேசிவிட்டார்.

இதன் மூலம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால் இதை வைத்து குணசேகரன் பக்காவாக வேறு ஏதோ திட்டம் தீட்டுகிறார் என்பது நன்றாக தெரிகிறது. இவ்வாறு பல சுவாரசியமான திருப்பங்களுடன் எதிர்நீச்சல் வர இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →