இந்த வாரம் நாமினேட்டான 5 போட்டியாளர்கள்.. அசலைத் தொடர்ந்து வெளியேற போகும் சிடுமூஞ்சி

விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இப்போது பிக் பாஸ் சீசன் 6 மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதாவது ஜி பி முத்து, சாந்தி, அசல் ஆகியோர் தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

மீதமுள்ள போட்டியாளர்கள் காரசாரமான சண்டைகளுடன் போட்டியை விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நடந்த நாமினேஷனில் அதிகமாக தேர்வு செய்யப்பட்ட நபர் கதிரவன். இவர் எந்த சண்டையிலுமே கலந்து கொள்ளாமல் சாதுரியமாக விளையாடி வருகிறார்.

இவரைத் தொடர்ந்து ஷெரினா, அசீம் ஆகியோரும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். ஏனென்றால் தனலட்சுமி விஷயத்தில் இவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியது, அதன்பின்பு குறும்படத்தின் மூலம் இவர்களது முகத்திரை கிழிந்துள்ளது. இதனால் சாக போட்டியாளர்கள் இவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மேலும் இந்த வார நாமினேஷனில் ஆயிஷா தேர்வாகியுள்ளார். கடந்த வாரம் உலக நாயகன் கமலஹாசன் மீதே பழியை போட்டார் ஆயிஷா. அவரது நடவடிக்கை நாளுக்கு நாள் மோசமாகி போவதால் ஆயிஷாவை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விக்ரமன் தேர்வாகியுள்ளார்.

அவர் ஞாயத்தின் பக்கம் நின்றாலும் அவரது பேச்சு சக போட்டியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவது போன்று தோன்றுகிறது. பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியின் செயல்பாடு போல் விக்ரமன் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இந்த வார நாமினேஷனில் விக்ரமன், ஆயிஷா, ஷெரின், அசீம், கதிரவன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷெரின் வெளியேற உள்ளார். ஏனென்றால் சிவாஜியையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு ஷெரின் அடிபட்டதாக நடித்தது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அசலைத் தொடர்ந்து அசீமின் விசுவாசி ஷெரின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.