சுடச்சுட ரெடியான இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. இந்த 5 பேரில் வெளியேறப் போகும் அடுத்த நபர்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கிட்டத்தட்ட 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜி பி முத்து, சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

மேலும் போட்டியாளர்களின் உண்மை முகம் தற்போது தெரிந்த வருவதால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வரை விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் யார் தேர்வாகியுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

முதலாவதாக விக்ரமன் ராபர்ட் மாஸ்டரை தேர்வு செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து நிவாஸினியை அசீம், ராம், எடிகே ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர். மேலும் ஜனனி, அசீம் ஆகியோரும் இந்த வார நாமினேஷனில் தேர்வாகியுள்ளனர். இதில் அதிக வாக்குகள் பெற்றுள்ளவர் தனலட்சுமி.

ஏனென்றால் கடந்த வாரம் தனலட்சுமியின் செயல்பாடுகள் வெளியில் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. ஆகையால் பல பேர் தனலட்சுமியை நாமினேட் செய்துள்ளனர்.

கமல்ஹாசனின் அறிவுரையை கேட்டு இந்த வாரம் தனலட்சுமி சூதானமாக நடந்து கொண்டால் பிக் பாஸ் வீட்டில் சில வாரங்கள் அவர் தாக்கு பிடிக்கலாம். ஆனால் பழையபடி தனது சுயரூபத்தை காட்டி கொண்டிருந்தால் இந்த வாரம் தனலட்சுமி கண்டிப்பாக வெளியேறுவார்.

தனலட்சுமிக்கு அடுத்தபடியாக நிவாஷினி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். ஏனென்றால் இவர் வீட்டில் உள்ள வேலை மற்றும் டாஸ்க் ஆகியவற்றில் ஈடுபாடு இல்லாமல் காணப்படுகிறார். ஆகையால் தனலட்சுமி அல்லது நிவாஷினி இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்ல உள்ளனர்.