2023-ல் ஜாக்பாட் வெற்றிக் கொடுத்த 5 ஹீரோக்கள்.. ஹாட்ரிக் அடிச்ச அனகோண்டா விஷால்

5 heroes gave hit movies in 2023: இந்த வருடத்தின் கடைசி சில நாட்களில் இருப்பதால் புத்தாண்டு செலிப்ரேஷனுக்காக காத்திருக்கின்றோம். ஆனால் இந்த வருடம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஐந்து ஹீரோக்களுக்கு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதிலும் விஷால் 2023ல் சற்றும் எதிர்பாராத வகையில் ஹாட்ரிக் வெற்றி படத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

ஜெய்: சில ஆண்டுகளாகவே ஜெய் நடிக்கும் படங்கள் எதுவும் சரியா ஓட்றதே இல்ல. இவருக்கு செகண்ட் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு தான் அடுத்தடுத்து கிடைத்தது. இருப்பினும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்த ஜெய், சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி என்ற படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் உடன் ராஜா ராணி படத்திற்கு பின் 10 வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அது மட்டுமல்ல ஜெய் நடிப்பில் வெளியான லேபில் என்ற வெப் சீரிசும் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த வருடமும் ஜெய்-க்கு ஏறு முகம் தான்.

அசோக் செல்வன்: தெகிடி படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகைகளை வசப்படுத்திய அசோக் செல்வன், இந்த வருடத்தில் தன்னுடைய காதலி கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார். அசோக் செல்வனுக்கு 2023-ம் ஆண்டு சிறந்த வருடமாகவே அமைந்தது. ஏனென்றால் இவர் சரத்குமார் உடன் இணைந்து நடித்த குறைந்த பட்ஜெட் படமான போர் தொழில் படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்தார். இந்த படத்திற்குப் பிறகு இவர் ரேஞ்ச் எங்கேயோ போய்விட்டது.

கவின்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட் என்றால் அது டாடா படம் தான். 2023 ஆம் ஆண்டு வந்த வெற்றி படங்களில் டாடா-வும் முக்கிய இடத்தைப் பிடித்தது. மிகக் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் மூன்றே வாரத்தில் 15 கோடியை வாரிக் குவித்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: சாமி வேற சயின்ஸ் வேற.. கண்ணகியால் வெடிக்கும் சர்ச்சை, மூடநம்பிக்கைக்கு பதிலடி

2023 ஆம் ஆண்டு ஐந்து நடிகர்களுக்கு நல்ல தொடக்கம் 

ஹரிஷ் கல்யாண்: இளம் நடிகராக தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்த ஹரிஷ் கல்யாண், சமீபத்தில் எம்எஸ் பாஸ்கர் உடன் சேர்ந்து பார்க்கிங் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஈகோ ஒருவருடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப் போட்டது என்பதை இதில் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் காட்டினார். இது மட்டுமல்ல இதற்கு முன்பு தோனி தயாரித்த LGM(Let’s Get Married) என்ற படத்திலும் நடித்தார். இதன் தொடர்ச்சியாக ஹரிஷ் கல்யாணுக்கு முன்னணி இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து அழைப்பும் வந்து கொண்டிருக்கிறது.

விஷால்: கடந்த வருடம் முழுவதும் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் கால் கடுக்க அலையோ அலையாய் அலைந்த அனகோண்டா விஷால், இப்போது ஒரு வழியா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இனிமே நடிகர் சங்க பொறுப்பே வேண்டாம் என்று முழு நேரம் படங்களில் தான் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

அதன் முதல் கட்டமாக விஷாலின் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக விஷால்- இயக்குனர் ஹரி கூட்டணிகள் தனது 34 ஆவது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு விஷாலுக்கு நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது.

Also Read: ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!