Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், எதிர்பார்த்தபடி கதைகள் இல்லை என்றாலும் பரவாயில்லை எதை நோக்கி கதையை கொண்டு போகிறோம் என்பதை மறந்து இயக்குனர் திருச்செல்வம் என்கிற ஜீவானந்தம் சீரியலை எடுத்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் 2 சீரியல் 5 விஷயத்தில் சொதப்பலாக இருக்கிறது. இதில் முதலாவது எல்லா பெண்களும் சேர்ந்து குணசேகரன் மீது புகார் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பினார்கள். ஆனால் சில காரணங்களுக்காக பரோலில் குணசேகரன் வருவதற்கு அதே பெண்கள் சம்மதம் தெரிவித்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் வீட்டுக்குள் தங்குவதற்கு அனுமதி கொடுத்து குணசேகரன் செய்த தவறை மறந்து விட்டார்கள். அத்துடன் பரோலில் குணசேகரன் வருவதற்கு முக்கிய காரணம் தர்ஷன் மற்றும் அன்புக்கரசியின் கல்யாணத்திற்காக தான். ஆனால் வந்த விஷயத்தையே மறந்து ஈஸ்வரி உடன் மணிவிழா நடக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடுகளை பண்ணி வருகிறார்.
அடுத்ததாக குணசேகரன் செய்த எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் புரிந்து கொண்ட ஈஸ்வரி விவாகரத்து கேட்டு சுதந்திரமாக வாழ்ந்தார். ஆனால் அதுவும் கொஞ்ச நாளைக்கு தான் என்பதற்கு ஏற்ப மாமியாரின் செண்டிமெண்டுக்காக குணசேகரன் வீட்டிற்கு திரும்ப வந்தார்.
அப்படி வந்த ஈஸ்வரி தற்போது குணசேகரன் போடும் டிராமாவில் கவிழ்ந்து மணிவிழா நடத்துவதற்கு சம்மதத்தையும் கொடுத்து ஒரு சோளக்காட்டு பொம்மை போல் எல்லாத்துக்கும் தலையாட்டி வருகிறார். அடுத்ததாக சக்தி, என்ன முடிவாக இருந்தாலும் என்னுடைய இஷ்டப்படி எனக்கு என்ன தோணுதோ அதை தான் நான் செய்வேன் என்று வீர வசனமாக பேசி வந்தார்.
ஆனால் தற்போது அண்ணன் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுக் கொண்டு வருகிறார். அதுவும் குணசேகரன் பணத்தை வைத்து கதிர் என்னலாம் ஆட்டம் ஆடினார் என்று சக்திக்கு நன்றாகவே தெரியும். அப்படி தெரிந்தும் தற்போது கதிருடன் சேர்ந்து ஊர் சுற்றுவது பழகுவது போன்று எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்.
முக்கியமாக ஜனனி சொல்வதை புரிந்து கொள்ளாமல் ஜனனிடம் சண்டை போடும் அளவிற்கு குணசேகரை விட மோசமாக மாறிக்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து நந்தினியின் மசாலா பொடி பிசினஸ் என்ன ஆச்சு என்று தெரியாமல் கேள்விக்குறியாக இருக்கிறது. அடுத்து ரேணுகாவின் பரதநாட்டியம் மற்றும் ஈஸ்வரியின் வேலை போன்ற விஷயங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது.
அடுத்ததாக புதுசாக ஒரு குடும்பத்தை கொண்டு வந்து ஜான்சி ராணியை விட மோசமாக அட்டூழியம் பண்ணிய அறிவுக்கரசியின் கதை அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது. இப்படி எங்கே ஆரம்பித்தது என்ன கதை போய்க்கொண்டிருக்கிறது என்பதை மறந்து புதுசு புதுசாக ஒரு ட்ராக் உள்ளே வந்து எல்லாமே தடுமாறி போகிறது.