Vijay Tv Serial Trp Rating List: நீயா நானா என்று போட்டி போடும் அளவிற்கு சன் டிவி மற்றும் விஜய் டிவி புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் எப்பொழுதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் சன் டிவி தான் இருக்கும். ஆனால் இந்த முறை மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது மொத்த சீரியலிலும் சன் டிவி முதல் இடத்தை பெற்றிருந்தாலும் வழக்கமாக வாங்கும் புள்ளிகளை விட கம்மியான புள்ளிகளை தான் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த முறை விஜய் டிவியில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மின்னல் வேகத்தில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் 7.64 புள்ளிகளை பெற்று வழக்கம்போல் சிறகடிக்கும் ஆசை சீரியல் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. அடுத்ததாக 7.06 புள்ளிகளைப் பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இதனை தொடர்ந்து மக்களின் பேவரைட் சீரியலாக இருக்கும் அய்யனார் துணை சீரியல் 6.85 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விட கடந்த வாரம் நேரத்தை மாற்றியதில் இருந்து மகாநதி சீரியல் எந்த இடத்தை பிடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதை பூர்த்தி செய்யும் விதமாக இந்த வாரம் மகாநதி சீரியல் 6.39 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. இப்பொழுதுதான் முதல்முறையாக அதிக புள்ளிகளை மகாநதி சீரியல் பெற்றிருக்கிறது.
இதற்கு காரணம் இந்த சீரியல் தினமும் 7.30 மணிக்கு மாற்றியதால் தான். இதனால் ரசிகர்களும் ஆனந்தத்தில் இருக்கிறார்கள். அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியல் 4.63 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.