CWC 6-ல் பங்குபெறும் 4 போட்டியாளர்கள்.. மீண்டும் இணையும் செம்பருத்தி கூட்டணி

Cook With Comali 6 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஆரம்பத்தில் டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற்ற இந்த நிகழ்ச்சி சமீபகாலமாக சர்ச்சைக்கு பேர் போய் உள்ளது.

வெங்கடேஷ் பட் விலகியது, பிரியங்கா-மணிமேகலை சண்டை என நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. மேலும் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் மூன்று நடுவர்கள் இடம்பெறுகிறார்கள்.

சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கௌஷிக் நடுவராக வர உள்ளார். இதில் செம்பருத்தி தொடரில் கதாநாயகியாக நடித்த ஷபானா கலந்து கொள்ள உள்ளார். அதேபோல் இந்த தொடரில் மாமியாராக நடித்த பிரியா ராமனும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.

CWC 6-ல் பங்குபெறும் 4 போட்டியாளர்கள்

இவ்வாறு மாமியார் மற்றும் மருமகள் இணைந்து குக் வித் கோமாளி சீசன் 6 சமைக்க உள்ளனர். அடுத்ததாக நடிகர் உமைர் லத்தீஃப் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். நான்காவதாக யாரும் எதிர்பார்க்காத நபர் தான்.

அதாவது இயக்குனர் மற்றும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கு பெறுகிறார். ஆகையால் இவர்கள் கோமாளிகளுடன் என்னென்ன அக்கப்போர்கள் பண்ணப் போகிறார்கள் என்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இந்த சீசன் இருக்கப் போகிறது.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் புகழ், ராமர், சுனிதா பூவையார், டோலி, குரோஷி போன்ற கோமாளிகளாக பங்கு பெற இருக்கின்றனர்.