5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளுடன் சிக்கிய சன் டிவி சீரியல் நடிகை.. வெளிவரும் திடுக்கிடும் விஷயம்!

drug trafficking: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சீரியல் நடிகை சிக்கி இருப்பது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போதை பொருள் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. போதையில் என்ன செய்கிறோம் என வழி தவறி போகும் இளைஞர்களால் நிறைய சமூக சீர்கேடுகளும் நடந்து வருகிறது.

அடுத்தடுத்து கஞ்சாவுக்கு அடிமையாகி சிறுவர்கள் நிறைய பேர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த போதை பொருள் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு மிகப் பெரிய அளவில் ஆபரேஷன் ஒன்றை நடத்தி வருகிறது.

வெளிவரும் திடுக்கிடும் விஷயம்!

இதில் பலரும் சிக்கி வருகிறார்கள். அப்படி சீரியல் நடிகை ஒருவர் 5 கிராம் மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருளுடன் சென்னை வணிகவளாகத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது இருப்பதிலேயே அதிக வீரியமிக்க போதைப் பொருள் என சொல்லப்படுகிறது.

இதை தயாரிக்க சூடோபெட்ரின் (Pseudoephedrine) என்னும் வேதிப்பொருள் உதவுகிறது. இதை கடத்திய வழக்கில் தான் பிரபல தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சிக்கி இருக்கிறார். இந்த போதைப் பொருளை கடத்துவதால் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால் எளிதாக இதை கடத்தி இளைஞர்களிடையே புழக்கத்தில் விடுகிறார்கள்.

ஜாஃபர் சாதிக் தொடர்ந்து நிறைய பெரிய புள்ளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சன் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிக்கும் துணை நடிகை மீனா என்பவர்தான் இந்த போதை பொருளை கடத்தி கைதாகி இருக்கிறார்.

drug
drug

இவர் யார் மூலமாக இந்த தொழிலை செய்தார், யாருக்கெல்லாம் போதை பொருளை கொடுத்து வருகிறார் என்ற தகவல் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment