பணத்தாசையால் படாத பாடுபடும் நடிகை.. மாஃபிங் செய்து மிரட்டல், கதறி அழுத பரிதாபம்

பிரபல சீரியல் நடிகை தற்போது கதறி அழுதபடி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பணத்தாசையால் அவர் செய்த சிறிய தவறு இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இதே போன்ற மற்றவர்களும் செய்து விடக்கூடாது என்பதற்காக தனக்கு நடந்த கொடுமையை கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ராஜகுமாரி போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானவர் லட்சுமி வாசுதேவன். தொடர்ந்து பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக ஒரு மெசேஜ் வந்தது. என்ன என்று பார்ப்பதற்காக அந்த லிங்கை கிளிக் செய்யும் போது ஒரு ஆப் டவுன்லோட் ஆகிவிட்டது. அதன் பின்பு இரண்டு, மூன்று நாட்கள் நான் சாதாரணமாக விட்டு விட்டேன். அதன் பிறகு தான் தெரிந்தது என் போன் ஹேக் செய்யப்பட்டு உள்ளது.

என் மொபைலில் உள்ள போட்டோ எல்லாம் டவுன்லோட் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த போட்டோக்களை மாஃபிங் செய்து என் வாட்ஸ் அப்பில் உள்ள நபர்களுக்கு அனுப்பி உள்ளனர். என்னுடைய பிரண்ட்ஸ் மற்றும் எனது பெற்றோருக்கே இந்த புகைப்படத்தை அனுப்பி உள்ளனர் என அவர் கதறி அழுதுள்ளார்.

தவறான லிங்கை கிளிக் செய்தால் தான் தற்போது ரொம்ப அவதிப்பட்டு வருவதாக லட்சுமி வாசுதேவன் கூறியுள்ளார். மேலும் இது போன்ற லோன் அல்லது ப்ரைஸ் மணி என்ற மெசேஜ் வந்தால் தயவுசெய்து அதை கிளிக் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இது போன்ற மெசேஜ் அடிக்கடி வந்தால் ரிப்போர்ட் என்று ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். ஒரே ஒரு மெசேஜை கிளிக் செய்ததால் படாத பாடுபட்டு வரும் லட்சுமி வாசுதேவன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →