Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் வெண்ணிலா பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வெண்ணிலாவின் மாமாவை சந்தித்து பேசி கையோடு கூட்டிட்டு வெண்ணிலாவை ஒப்படைக்க போகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவேரி சந்தோஷமாகிவிட்டார். வெண்ணிலா பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டால் நாம் விஜயுடன் சேர்ந்து விடலாம், அத்துடன் குழந்தையும் சந்தோஷமாக வளர்க்கலாம் என்று ஆசையுடன் பைக்கில் அப்பளத்தை விற்கப் போகிறார்.
அப்படி கடையில் கொடுத்துட்டு வரும்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது. இதனால் பைக்கில் இருந்து கீழே விழுந்த காவேரி பயந்து போய் ஹாஸ்பிடலுக்கு போகிறார். நடந்த விஷயத்தை சொல்லிய நிலையில் டாக்டர் காவிரியை செக்கப் பண்ணுகிறார்கள். அப்படிச் செக்கப் பண்ணி பார்த்தபொழுது குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் காவேரிக்கு சில அட்வைஸ்களை கொடுக்கிறார்கள். அதாவது சரியான மாத்திரையை எடுக்கவில்லை என்றால் குழந்தை வீக்காகி விடும், பிறகு பிறக்கும் பொழுது பிரச்சினையில் வந்து முடியும். அதனால் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. குழந்தை வேணும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது அதற்கான சில விஷயங்களையும் நாம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
உடனே காவிரி, நான் என்னுடைய அக்கா எடுக்கும் மாத்திரைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லிய பொழுது மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி தான் மருந்து மாத்திரை கொடுக்கப்படும். அது உங்களுக்கு சரியானதா என்று பார்த்த பிறகு தான் நீங்கள் அதை சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார். பிறகு சில மாத்திரைகளை கொடுத்து இதை தினமும் சாப்பிட வேண்டும் என்று காவேரி இடம் கொடுத்து விடுகிறார்கள்.
வீட்டுக்கு வந்த காவேரி வீட்டு வேலையும் பார்த்துட்டு அப்பளக்கெட்டையும் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் காவேரி பொருட்காட்சியில் அப்பளக்கட்டு விற்பதற்கு ஏற்பாடு பண்ணதில் இடம் கிடைக்கவில்லை என்று தெரிந்து கொண்ட விஜய் அவருக்கு தெரிந்த நபர் மூலம் காவிரி ஆசைப்பட்ட மாதிரி பொருட்காட்சியில் அப்பளக்கட்டு விற்பதற்கு ஏற்பாடு பண்ணிவிட்டார்.
இந்த தகவலை காவேரி வீட்டில் இருக்கும் பொழுது பொருட்காட்சி ஏற்பாடு பண்ணும் நபர் போன் பண்ணி சொல்கிறார். உடனே சந்தோசத்தில் காவிரி அவரை நேரடியாக சந்தித்து பேசுவதற்கு கிளம்பி விட்டார். என்னதான் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுட்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் யோசித்து கவனமாக இருக்க வேண்டும் என்பதே மறந்து விடுகிறார்.
அடுத்ததாக வெண்ணிலா மாமா வந்து வெண்ணிலாவை கூட்டிட்டு போகிறார் என்ற விஷயம் ராகினிக்கு தெரிந்ததால் பசுபதியை சந்தித்து இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணுகிறார். அதன்படி பசுபதி மற்றும் ராகினி இருவரும் சேர்ந்து வெண்ணிலாவின் மாமா மனசை மாற்றும் விதமாக முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப இந்த சதியால் காவேரி விஜய்க்கு சப்போர்ட்டாக நிற்கப் போகிறார்.